Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2025-ல் அறிமுகமான அட்டகாசமான பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

Best Smartphones of 2025 | 2025-ல் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. இந்த நிலையில், 2025-ல் அறிமுகமான பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் குறித்தும் அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025-ல் அறிமுகமான அட்டகாசமான பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Dec 2025 12:47 PM IST

ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏராளமான முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த நிலையில், 2025-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025-ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் (Samsung), விவோ (Vivo), ஒப்போ (Oppo), ஆப்பிள் (Apple) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 2025-ல் அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு7

சாம்சங் நிறுவனம் மடிக்க கூடிய வகையில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு7 (Samsung Galaxy Z Fold7 Smartphone). இந்த ஸ்மார்ட்போன் தற்போது சந்தையில் கிடைக்க கூடிய மெல்லிய தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையாக அமேசானில் ரூ.1,70,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : பிளிப்கார்ட் Buy Buy சேல்.. நத்திங் ஸ்மார்ட்போன்கள், வாட்ச் மற்றும் இயர்பட்ஸ்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

விவோ எக்ஸ்300 ப்ரோ

விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனை (Vivo X300 Pro Smartphone) அறிமுகம செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 120Hz LTPO OLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 9500 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6510 mAh பேட்டரி மற்றும் 90 வாட்ஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் மிக குறைந்த விலையாக ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ

ஓப்போ நிறுவனம் இந்த ஆண்டு ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் Flexible LTPO AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 பிராசசரை கொண்டுள்ளது. இதில் 7500 mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது 80 வாட்ஸ் சூப்பர் VOOC வயர்டு மற்றும், 50 வாட்ஸ் ஏர்VOOC வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் ரூ.1,09,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ChatGPT-யிடம் கேட்கவே கூடாத மூன்று கேள்விகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra). இந்த ஸ்மார்ட்போனில் 6.90 இன்ச் Touchscreen டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் கொண்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனுக்கு 1டிபி வரை ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,59,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ

இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (iPhone 17 Series Smartphones) அறிமுகம் செய்தது. அந்த ஸ்மார்ட்போன் வரிசையில் அறிமுகமானது தான் இந்த ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் (Apple iPhone 17 Pro Smartphone). இந்த ஸ்மார்ட்போனில் 15.93 சூப்பர் ரெடினா XDR டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 256, 512 மற்றும் 1டிபி ஆகிய ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,34,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ChatGPT-யிடம் கேட்கவே கூடாத மூன்று கேள்விகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஜியோமி 15 அல்ட்ரா

ஜியோமி நிறுவனம் 2025-ல் அறிமுகம் செய்த ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் தான் ஜியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் (Xiaomi 15 Ultra Smartphone). இந்த ஸ்மார்ட்போனில் 6.73 120Hz AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. 5410 mAh பேட்டரி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 90 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 80 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,09,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.