Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ChatGPT-யிடம் கேட்கவே கூடாத மூன்று கேள்விகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

You Must Never Ask These Questions To ChatGPT | தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது அனைத்து தேவைகளுக்காகவும் சாட்ஜிபிடியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், இந்த மூன்று கேள்விகளை சாட்ஜிபிடியிடம் கேட்கவே கூடாது என்று கூறப்படுகிறது. அது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

ChatGPT-யிடம் கேட்கவே கூடாத மூன்று கேள்விகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Dec 2025 23:42 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் சாட்ஜிபிடியை (ChatGPT) அதிகம்  பயன்படுத்த தொடங்கிவிட்டனர். முன்பெல்லாம் பொதுமக்கள் பரவலாக கூகுள் (Google) தேடுபொறியை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மொத்தமாக சாட்ஜிபிடிக்கு மாறிவிட்டனர். விரைவாகவும், கூடுதல் விவரங்களையும் தருவதால் பலரும் சாட்ஜிபிடியையே தேர்வு செய்கின்றனர். ஆனால், பொதுமக்கள் ஆர்வமாக பயன்படுத்தும் சாட்ஜிபிடியில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக சில கேள்விகளுக்கு தவறான பதில்களை தரும் சாட்ஜிபிடி அதனை பயனர்கள் நம்பும் வகையில் செய்கிறது. இதனால் பல சிக்கல்கள் உருவாகிறது. இந்த நிலையில், சாட்ஜிபிடியிடம் கேட்கவே கூடாத மூன்று கேள்விகள் உள்ளன. அவை என்ன என்ன, ஏன் அவற்றை குறித்து சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடல்நல பிரச்னைகளுக்கு தீர்வு கேட்க கூடாது

உங்களுக்கு ஏதேனும் உடல்நல சிக்கல்கள் அல்லது ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், அது குறித்து சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாது. நீங்கள் அவ்வாறு கேட்கும் கேள்விகளுக்கு சாட்ஜிபிடி அளிக்கும் பதிலை பின்பற்றினால் உங்களது உயிருக்கும் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவரை அனுகுவதே சிறந்த முறையாகும்.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி பி4எக்ஸ்.. முழு அம்சம் இதோ!

மனநலன் குறித்து பகிராதீர்கள்

அனைவருக்கும் வாழ்க்கையில் சிக்கல் இருக்கும். சிலர் அந்த சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்க்கொள்ள முடியாமல் கடும் மன உளைச்சலுகு தள்ளப்படுவார்கள். இத்தகைய சூழல்களில் நீங்கள் சாட்ஜிபிடியிடம் கேட்கும் பட்சத்தில் அது உங்களுக்கு ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மன உளைச்சல் குறித்து கேட்ட சிலருக்கு சாட்ஜிபிடி தற்கொலை செய்துக்கொள்வதை விடையாக கொடுத்துள்ளது. இதன் மூலம் சில உயிர்களும் பரிபோயுள்ளன. எனவே உங்களது மனநலன் மற்றும் சிக்கல்கள் குறித்து சாட்ஜிபிடியிடம் கேட்காதீர்கள்.

இதையும் படிங்க : லேப்டாப், டெஸ்க்டாப்களை இப்படி பராமரித்தால் ரொம்ப வருஷம் நல்லா யூஸ் பண்ணலாம்!

பொருளாதாரம் மற்றும் பணம் குறித்த கேள்விகளை கேட்காதீர்கள்

பலரும் தங்களது பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது என்பது குறித்து சாட்ஜிபிடியிடம் கேட்கின்றனர். அவ்வாறு கேட்கும்போது சாட்ஜிபிடி சில வகையான முதலீடு மற்றும் டிப்ஸ்களை வழங்கும். அவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு பொருளாதார சிக்கல்கள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.