அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுனமானது விவோ எக்ஸ் 300 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்!
Vivo X300 and X300 Pro Launched in India | இந்தியாவில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய விவோ எக்ஸ் 300 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவோ (Vivo) நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களான விவோ எக்ஸ் 300 சீரீஸ் (Vivo X300 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரீஸில் விவோ எக்ஸ் 300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ் 300 ப்ரோ (Vivo X300 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் சிறந்த கேமரா அம்சங்களுக்காக விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று (டிசம்பர் 02, 2025) அறிமுகமாகியுள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவோ எக்ஸ் 300 மற்றும் விவோ எக்ஸ் 300 ப்ரோ அறிமுகம்
இந்த விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5E BOE Q10+ LTPO OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. விவோ எக்ஸ் 300 மற்றும் விவோ எக்ஸ் 300 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளன. விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போன் 50 எம்பி சோனி LYT – 828 மெயின் சென்சார், 50MP JN1 அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : WhatsApp : இந்த தவறுகளை செய்தால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படாலாம்!
விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
vivo X300 officially launched in India🇮🇳
📱6.31″ 1.5K LTPO 120Hz AMOLED Display
💾MediaTek Dimensity 9500 (3nm) SoC
📸200MP (Main) + 50MP (3X Periscope) + 50MP (UW) Rear Cameras
🤳50MP Front Camera
🔋6040mAh Battery
⚡90W (Wired) + 40W (Wireless) Charging
⚙️Android 16, Origin… pic.twitter.com/WSJAuJqBQ1— TrakinTech (@TrakinTech) December 2, 2025
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.75,999 ஆக உள்ளது. இதுவே 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.81,999-க்கும், 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.85,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமேசான் பிளாக் ஃபிரைடே சேல்.. மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்!
16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மர்ட்போன் ரூ.1,09,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.