10,000 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ரியல்மி பி4 பவர்!
Realme P4 Power Smartphone Introduced In India | ரியல்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்கள் மத்தியில் ரியல்மி (Realme) நிறுவனம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனத்திற்கு ஏராளமான இந்திய வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், தங்களது வாடிக்கையாளர்களுக்காக ரியல்மி நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனை (Realme P4 Power Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரியல்மி பி4 பவர் – இந்திய விலை பட்டியல்
- ஆரம்ப மாடலான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999 ஆக உள்ளது.
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 ஆக உள்ளது.
- 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,999 ஆக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 உடனடி சலுகையாக பெறலாம். இதுதவிர ரூ.2,000 வங்கி சலுகையும் பெற முடியும்.
இதையும் படிங்க : விரைவில் வாட்ஸ்அப்பில் வர உள்ள கட்டண முறை.. அதிர்ச்சியில் பயனர்கள்!
ரியல்மி பி4 பவர் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
India’s first 10,000mAh Battery phone, realme P4 Power Just launched in India for ₹27,999!
– 10001mAh Si-C Battery
– 80W Wired + 27W Reverse Wired Charging
– 6.8″ 144Hz 1.5K Quad Curved AMOLED Display, Corning Gorilla Glass 7i Protection
– Mediatek Dimensity 7400 Ultra, with UFS… pic.twitter.com/I8U3M9iaVj— Beebom (@beebomco) January 29, 2026
இந்த ஸ்மார்ட்போன் 10,000 mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியை கொண்டுள்ளது. இதில் 6.78ன் இன்ச் quad – curve AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியேடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 27 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 05, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.