AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக வானிலை அப்டேட்: வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Weather Update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. சில மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை பகுதியில் வெப்பநிலை 33–34° செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வானிலை அப்டேட்: வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்பு
மழை வாய்ப்புImage Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Mar 2026 15:35 PM IST

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. மழை பெய்ததாக குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் இல்லை. பல பகுதிகளில் வானம் தெளிவாகவும் சில இடங்களில் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. பொதுவாக இந்த காலகட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் வானிலை நிலைமை வழக்கமான நிலையில் தொடர்ந்தது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் பதிவாகவில்லை. சில இடங்களில் இயல்பை விட சுமார் 2° செல்சியஸ் வரை அதிகரிப்பு காணப்பட்டது. இதே நேரத்தில் மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 38.2° செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை நிலவரம்

குறைந்தபட்ச வெப்பநிலையிலும் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. சமவெளிப் பகுதிகளில் திருப்பத்தூர் AWS பகுதியில் 21.0° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மலைப்பகுதிகளில் மிகவும் குறைந்த வெப்பநிலை கொடைக்கானலில் 8.8° செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இதனால் மலைப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் முதல் குமரிக்கடல் வரை மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதேபோல் வடக்கு கடலோர தமிழக பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

இதன் காரணமாக 2026 மார்ச் 16ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இடிமின்னலுக்கு வாய்ப்புள்ளது. 2026 மார்ச் 17ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2026 மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே நேரத்தில் மற்ற தமிழக பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பதிவாகலாம். மார்ச் 20ஆம் தேதி கடலோர தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

2026 மார்ச் 21ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 22ஆம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

2026 மார்ச் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு. 2026 மார்ச் 18 முதல் 20ஆம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை குறையக்கூடும்.

Also Read: கோடை வெயில் சுட்டெரிக்கும்.. மிதமான மழைக்கும் வாய்ப்பு.. வானிலை அப்டேட் இதோ..

சென்னை வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2026 மார்ச் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33–34° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24–25° செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us