AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோடை வெயில் சுட்டெரிக்கும்.. மிதமான மழைக்கும் வாய்ப்பு.. வானிலை அப்டேட் இதோ..

Tamilnadu Weather: தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

கோடை வெயில் சுட்டெரிக்கும்.. மிதமான மழைக்கும் வாய்ப்பு.. வானிலை அப்டேட் இதோ..
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Mar 2026 07:29 AM IST

சென்னை, மார்ச் 15: தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தின் அநேக இடங்களில் வெப்பநிலை உச்சம் தொட்டு வருகிறது. எனினும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்றைய தினம் (மார்ச் 14) லேசான மழை பெய்தது. அதோடு, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்துள்ளது.

இதையும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி? தவெகவில் திடீர் ஆலோசனை… மாவட்ட செயலர்கள் கூறிய முக்கிய தகவல்!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

தொடர்ந்து 16-03-2026 அன்று நீலகிரி மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17-03-2026 அன்று தென்தமிழகம், வடஉள்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏனைய தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கக்கூடும்.

18-03-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-03-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20-03-2026 தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெப்பநிலையில் மாற்றம்:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கக்கூடும். 16-03-2026 முதல் 18-03-2026 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இதனால் சில பகுதிகளில் வெப்பநிலை சற்று தணிவடையும் நிலை உருவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us