Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லேப்டாப், டெஸ்க்டாப்களை இப்படி பராமரித்தால் ரொம்ப வருஷம் நல்லா யூஸ் பண்ணலாம்!

Laptop and Desktop Maintenance | தற்போதைய காலக்கட்டத்தில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் ஆகியவை பொதுமக்களின் வாழ்வில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், அவை நீடித்து உழைக்க என்ன செய்ய வேண்டும், அவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

லேப்டாப், டெஸ்க்டாப்களை இப்படி பராமரித்தால் ரொம்ப வருஷம் நல்லா யூஸ் பண்ணலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Dec 2025 00:12 AM IST

லேப்டாப் (Laptop), டெஸ்க்டாப் (Desktop) ஆகியவற்றை காலம் முழுவதும் பயன்படுத்த முடியாது தான், ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பதன் அவற்றை பல ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த நிலையில், தினமும் செய்யும் ஒருசில தவறுகள் மூலம் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன, அவற்றை பாதிக்கப்படாமல் மிக நீண்ட நாட்கள் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிக வெப்பம் ஆபத்தை ஏற்படுத்தலாம்

டெஸ்க்டாப் கடினமாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக அது எளிதில் வெப்பமாகாது. இத்தகைய சூழலில் உங்களது டெஸ்க்டாப் அடிக்கடி வெப்பமாகிறது என்றால் நீங்கள் அதனை முறையாக பயன்படுத்தவில்லை என்று அர்த்தம். இதேபோல லேப்டாப்கள் கூலிங் தன்மை அதிகம் கொண்டு இருக்கும். மெத்தை, மேசை, சோஃபா உள்ளிட்டவற்றின் மீது லேப்டாப் வைத்து பயன்படுத்துவது அவற்றை மிக எளிதில் வெப்பமாக செய்துவிடும். எனவே இந்த தவறுகளை செய்யாமல் உங்களது லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். குறிப்பாக லேப்டாப், டெஸ்க்டாப் ஆகியவற்றுக்கு நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுனமானது விவோ எக்ஸ் 300 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்!

அழுக்கு தூசி ஆகியவற்றால் ஏற்படும் சிக்கல்கள்

தூசி, புகை, செல்லப்பிராணிகளின் முடி ஆகியவை உங்களது லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் ஆகியவற்றுக்குள் செல்லும் பட்சத்தில் அவை அவற்றின் கூகுலிங் சிஸ்டத்தை கடுமையாக பாதிக்கும். அழுக்கு, தூசி ஆகியவை லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களுக்குள் செல்லும் பட்சத்தில் அது அவற்றின் கூலிங் சிஸ்டத்தை முழுமையாக பாதித்து அடிக்கடி வெப்பமாவது, அதிக ஒலி மற்றும் அடிக்கடி ஷட் டவுன் ஆகுவதற்கு வழிவகை செய்யும். எனவே உங்களது லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் ஆகியவற்றில் தூசி மற்றும் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

இதையும் படிங்க : Sanchar Saathi : இனி அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த செயலி கட்டாயம்.. செல்போன் நிறுவனங்களுக்கு அரசு ஸ்டிரிக்ட் ரூல்ஸ்!

அஜாக்கிரதையாக பயன்படுத்துவது

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களை அஜாக்கிரதையாக பயன்படுத்துவது அதனை சேதப்படுத்தி, செயல் திறனை பாதிக்க கூடும். அவற்றின் மீது கடினமான பொருட்களை வைப்பது, தவறி கீழே போடுவது, தண்ணீர் படும் வகையில் பயன்படுத்துது ஆகியவை எளிதாக பாதிக்க கூடும். எனவே அவற்றை குறித்து கவனமாக உள்ளது சிறப்பானது.