Sanchar Saathi : இனி அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த செயலி கட்டாயம்.. செல்போன் நிறுவனங்களுக்கு அரசு ஸ்டிரிக்ட் ரூல்ஸ்!
Sanchar Saathi App Mandatory For Smartphones | இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இனி அறிமுகம் செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு செயலி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்களின் (Cyber Crime) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், சைபர் குற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு தங்களது பணத்தை இழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் அரசு தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி அறிமுகம் செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த செயலி கட்டாயம் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த செயலி பயனர்கள் டெலிட் செய்ய முடியாத வகையில் இருக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. இந்த நிலையில், இனி வரும் ஸ்மார்ட்போன்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ள செயலி எது, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி அறிமுகம் செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இது கட்டாயம்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மோசடி மற்றும் குற்ற சம்பங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த நிலையில் தான் இனி அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்போன்களில் அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) கட்டாயம் இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இந்தியா மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையை கொண்டுள்ள நிலையில், ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!
90 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள அரசு
புதிய ஸ்மார்ட்போன்களில் இந்த செயலியை நிறுவ 90 நாட்கள் அரசு அவகாசம் வழங்கியுள்ளது. இதுதவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்களில் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. இந்த உத்தரவை கடைபிடிக்க தவறும் செல்போன் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : Provident Fund : அதிரடியாக உயரப்போகும் பிஎஃப் வட்டி.. வெளியான முக்கிய தகவல்!
அனைவருக்கும் எந்த வித சிக்களும் இன்றி சைபர் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், இந்த சைபர் பாதுகாப்பு செயலியை டெலிட் செய்ய முடியாத வகையில் பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என்று செல்போன் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.