AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!

What To Do After Credit Card Scam | இந்தியாவில் தற்போதைய காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நீங்களும் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கினால் இந்த சில விஷயங்களை செய்ய தவறாதீர்கள்.

Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Nov 2025 15:32 PM IST

மாறி வரும் கால சூழலில் பொதுமக்களின் பொருளாதர தேவையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள பெரும்பாலான நபர்கள் கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்துகின்றனர். அவ்வாறு சாமானிய மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கிரெடிட் கார்டு பயன்பாடு எந்த அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறதோ அதே அளவுக்கு கிரெடிட் கார்டு தொடர்பான மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நீங்கள் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கினால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தி விரிவாக பார்க்கலாம்.

கிரெடிர் கார்டு மோசடியில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கினால் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) உங்களை பாதுகாக்கும். அதற்கு நீங்கள் ஒருசில விஷயங்களை கட்டாயம் செய்திருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டை முடக்கம் செய்ய வேண்டும்

உங்களது கிரெடிட் கார்டில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான பண பரிவர்த்தனை, அல்லது மோசடி நடந்திருப்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களது கிரெடிட் கார்டை உடனடியாக முடக்கம் செய்யுங்கள். வங்கியின் செயலி, இணையதளம், கஸ்டமர் கேர் ஆகியவற்றின் மூலமாக இதனை நீங்கள் சுலபமாக செய்து முடித்துவிடலாம்.

இதையும் படிங்க : உலகின் இரண்டாவது பணக்காரராக முன்னேறினார் லாரி பேஜ்.. லாரி எலிசனை முந்தினார்!

வங்கியிடம் புகார் அளியுங்கள்

உங்கள் கிரெடிட் கர்டில் மோசடி நடந்தால் உடனடியாக அது தொடர்பாக வங்கியிடம் புகார் அளியுங்கள். அப்போது வங்கிகள் உங்களிடம் மோசடிக்கான படிவத்தை நிரப்ப கூறும். அதில் எந்த நேரத்தில் மோசடி நடைபெற்றது, எப்படி நடைபெற்றது, எந்த நாளில் நடைபெற்றது உள்ளிட்ட அடிப்படை தகவல்களுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும்.

அனைத்து தரப்பிலும் புகார் அளியுங்கள்

வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் புகார் மேலான்மை அமைப்பு (RBI’s Complaint Management System) ஆகியவற்றிடம் புகார் அளியுங்கள். அதுமட்டுமன்றி, உங்களது வீட்டின் அருகே உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளியுங்கள். இது சட்ட ரீதியாக மோசடியை கையாள மிகவும் சிறந்த முறையாக இருக்கும்.

இதையும் படிங்க : இனி 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட்.. ஆர்பிஐ-ன் அசத்தல் திட்டம்!

ஆதாரங்களை சேமியுங்கள்

உங்களது கிரெடிட் கார்டில் மோசடி நடைபெற்றது முதல் ஸ்கீரின் ஷாட்கள், புகார் நகல்கள் ஆகியவற்றை சேமித்துன் வையுங்கள். அது உங்களுக்கு ஆதாரவாக செயல்படும் முக்கிய அம்சங்களாக அமையும்.

Follow Us