அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி பி4எக்ஸ்.. முழு அம்சம் இதோ!
Realme P4x Launched in India | ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ரியல்மி பி4 எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ரியல்மி (Realme). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. ரியல்மி பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நிலையில், அது சாமானிய மக்களுக்கு மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ரியல்மி பி4எக்ஸ் ஸ்மார்ட்போனை (Realme P4x Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரியல்மி பி4 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
இந்த ஸ்மார்ட்போன் 6.72 இன்ச் டிஸ்பிளே உடன் 144Hz Refresh Rate அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அதிகபட்ச பிரைட்னஸ் 1,000 நிட்ஸ் ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்பீக்கர் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.




இதையும் படிங்க : Sanchar Saathi : இனி அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த செயலி கட்டாயம்.. செல்போன் நிறுவனங்களுக்கு அரசு ஸ்டிரிக்ட் ரூல்ஸ்!
ரியல்மி பி4 எக்ஸ் ஸ்மார்ட்போன் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
Same segment. Different league.
The #realmeP4x sets the pace with a 780k+ score and 7000mAh power, built to outpower every “V-ery slow” option out there.
Starting from ₹13,499.*
Sale starts 10th Dec, 12 PM.
*First sale offer valid for 12 hours only
Know more:… pic.twitter.com/KiTWDvsbsx
— realme (@realmeIndia) December 4, 2025
இந்த ஸ்மார்ட்போனில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய 50 மெகாபிக்சல் அம்சத்துடன் கூடிய மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல 8 மெகாபிக்சல் அம்சத்துடன் கூடிய முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மர்ட்போனில் 7,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Google Map : நெட்வொர்க் இல்லாமலே கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்.. இந்த அம்சம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
விலை என்ன?
6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பி4எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.17,499-க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.19,499-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.