AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிம் கார்டு ஆக்டிவாக இல்லை என்றால் இந்த செயலிகளை பயன்படுத்த முடியாது.. அரசு போட்ட முக்கிய ரூல்ஸ்!

Government Mandates Strict Rules For Apps | சிம் கார்டு ஆக்டிவாக இல்லை என்றால் அந்த எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செயலிகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில விதிகளையும் கொண்டுவர உள்ளது.

சிம் கார்டு ஆக்டிவாக இல்லை என்றால் இந்த செயலிகளை பயன்படுத்த முடியாது.. அரசு போட்ட முக்கிய ரூல்ஸ்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Nov 2025 23:39 PM IST

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), டெலிகிராம் (Telegram) உள்ளிட்ட பல செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த செயலிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், சிக்னல், ஸ்நப்சாட், ஷேர்சார், ஜியோசாட், அரட்டை, ஜோஸ் அகிய செயலிகளில் பயன்பாட்டில் இல்லாத சிம் கார்டுகளை வைத்திருக்கும் நபர்கள்  இந்த செயலிகளை பயன்படுத்த முடியாத வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு துறை (Telecommunication Department) உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு வந்த ஸ்டிரிக்ட் ரூல்ஸ்

2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகளில் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட இந்த செயலிகளில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் 90 நாட்களுக்குள்ளாக தங்களது சிம் கார்டுகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகளை லேப்டாப் உள்ளிட்ட செயலிகள் மூலம் வெப்பில் லாக் இன் செய்து பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதியையும் கொண்டு வந்துள்ளது. அதாவது வெப்பில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் நபர்கள் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு பிறகும் மீண்டும் செயலியை ஸ்மர்ட்போனின் உள்ள செயலியில் இருந்து QR (QR – Quick Response) கோடை ஸ்கேன் செய்து லாக் இன் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள்.. குரோமா சேலில் சம்பவம்!

அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள என்ன காரணம்?

வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் அதிகப்படியான் மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவற்றை தடுக்கும் நோக்கில் தான் அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. தற்போது மொபைல் செயலியை முதன் முதலில் லாக் இன் செய்யும்போதுதான் சிம் கார்டு பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதன் பிறகு சிம் கார்டு குறித்த எந்த வித தொடர்பும் இல்லாமல் இமெயில் மூலம் ஓடிபி அனுப்பி லாக் செய்துக்கொள்ளும் வசதி உள்ளது. இது மோசடிக்காரர்களுக்கு மிகவும் எளிதானதாக உள்ளது. இந்த நிலையில் தான் அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us