மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள்.. குரோமா சேலில் சம்பவம்!
Massive Discounts For iPhones | குரோமா தனது பிளாக் ஃபிரைடே சேலை நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்த எந்த ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எப்படியாவது ஐபோனுக்கு (iPhone) மாறிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டு இருக்கும் நபர்களா நீங்கள். உங்களுக்கான சரியான வாய்ப்பு தான் இது. அதாவது குரோமா (Croma) நிறுவனம் தனது பிளாக் ஃபிரைடே சேலை (Black Friday Sale) நடத்தி வருகிறது. இந்த சேலில் ஐபோன்களுக்கு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி நீங்கள் மிக குறைந்த விலையில் ஐபோன்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில், குரோமா சேலில் அசத்தல் சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குரோமா சேலில் அசத்தல் தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள்
இந்த குரோமா சேலில் ஐபோன் 16, ஐபோன் 17, ஐபோன் ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ஐபோன் 16 ஸ்மார்ட்போனுக்கான தள்ளுபடி
128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட்போனை (iPhone 16 Smartphone) குரோமா சேலில் வெறும் ரூ.39,900-க்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் 2024 ஆம் ஆண்டு ரூ.79,900-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் ரூ.39,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குரோமா ரூ.13,410 சலுகை வழங்கும் நிலையில், வங்கி சலுகைகள், கேஷ்பேக், எக்ஸ்சேஞ் ஆஃபர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ரூ.39,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : உங்கள் லேப்டாப் அடிக்கடி வெப்பாமாகுதா?.. இந்த சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!
ஐபோன் 17 ஸ்மார்ட்போனுக்கான தள்ளுபடி
ஐபோன் 17 ஸ்மார்ட்போன் (iPhone 17 Smartphone) அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஐபோன் 17 ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வெறும் ரூ.45,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.82,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனையாகிறது. குரோமா சலுகை, வங்கி சலுகை, கேஷ்பேக் ஆகியவற்றை பயனபடுத்தி ரூ.82,900-க்கான இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.45,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான மோட்டோ ஜி57 பவர்!
ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனுக்கான தள்ளுபடி
குரோமா சேலில் அசத்தல் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில் ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனும் (iPhone Air Smartphone) ஒன்று. இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.54,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,19,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது குரோமா சேலில் வெறும் ரூ.54,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.



