கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இனி ஸ்பேம் தொல்லை இல்லை.. வந்தது அசத்தல் அம்சம்!
Scam Detector Introduced In Google Pixel Smartphones | ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பொதுமக்களின் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது தான் ஸ்பேம் கால்கள். இந்த நிலையில், தனது பயனர்கள் இந்த ஸ்பேம் கால்களால் பாதிக்கப்படாமல் இருக்க கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது தான் ஸ்பேம் கால்கள் (Spam Calls). இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த ஸ்பேம் கால் சிக்கலை எதிர்க்கொள்கின்றனர். மேலும் இந்த ஸ்பேம் கால் சிக்கல் மூலம் பலர் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் அரசும் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்கேம் டிடக்டரை அறிமுகம் செய்த கூகுள்
கூகுள் நிறுவனம் ஜெமினி நேனோவின் ஸ்கேம் டிடக்டர் (Gemini Nano Scam Detector) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் பொதுமக்களை ஸ்பேம் கால்கள் குறித்து எச்சரிக்கும் நிலையில், அவர்கள் மோசடி வலையில் சிக்கொக்கொள்ளாமல் முன்கூட்டியே அது ஸ்பேம் என தெரிந்துக்கொள்ள வழிவகை செய்யவும் உதவும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : நீங்களே உங்களது வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்கலாம்.. எப்படி தெரியுமா?
கூகுள் ஸ்கேம் டிடக்டர் அம்சம் எப்படி செயல்படும்?
கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஜெமினி நானோ ஏஐ (AI – Artificial Intelligence) அம்சம் ஸ்கேம்களை சோதனை செய்யும். இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வரும் அழைப்புகளை ஆராய்ந்து அதில் ஏதேனும் மோசடிகள் தொடர்பான காரணிகள் தென்பட்டால் அது குறித்து உடனடியாக பயனர்களுக்கு தெரியப்படுத்தும். இந்த அம்சம் பயனர்கள் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படும். அதாவது இந்த அம்சம் வேண்டும் என நினைக்கும் நபர்கள் அதனை ஆன் செய்து பயன்படுத்தலாம். வேண்டாம் என நினைக்கும் நபர்கள் அதனை ஆஃப் செய்து வைத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் சிக்கல்.. வாட்ஸ்அப்பில் செய்யும் இந்த ஒரு மாற்றம் பயனுள்ளதாக இருக்கும்!
ஒருவேளை பிக்சல் பயனர்கள் இந்த அம்சத்தை ஆன் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் அந்த அம்சத்தை ஆனில் வைத்திருக்கும் நபர் மற்றும் அவரை தொடர்ப்புக்கொண்டு பேசும் நபர் ஆகிய இருவருக்குமே பீப் சத்தம் கேட்கும். மேலும், இந்த அம்சம் ஒருவரின் ஆடியோ காலை அனுமதியின்றி பதிவு செய்வதையும் தடுக்கிறது. இது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.