AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜிமெயிலில் சுலபமாக இமெயில்களை டிரான்ஸ்டேல் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

You Can Easily Translate Your Emails In Gmail | நிறுவனங்கள், தனிநபர்கள், தொழில் செய்யும் நபர்கள் என அனைவரும் மிகவும் முக்கியமான விவரங்கள் மற்றும் தகவல்களை ஜிமெயிலில் பரிமாறுகின்றனர். இந்த நிலையில், ஜிமெயிலில் இமெயில்களை மொழிப்பெயர்ப்பு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயிலில் சுலபமாக இமெயில்களை டிரான்ஸ்டேல் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Mar 2026 18:56 PM IST

அலுவலகங்களில் பணி தொடர்பான உரையாடல்களுக்கு ஜிமெயில் (Gmail) மிக முக்கிய செயலியாக உள்ளது. காரணம், ஜிமெயில் மூலமாக தான் அனைத்து ஃபைல்களும், தகவல்களும் பரிமாறப்படுகிறது. நீங்கள் ஒருவேளை வெளிநாட்டு நிறுவனங்களில் பணி புரிந்து அவர்களின் மொழி உங்களுக்கு புரியவில்லை என்றால் கவலையே வேண்டாம். ஜிமெயிலில் உள்ள மொழிப்பெயர்ப்பு அம்சம் மூலம் உங்கள் ஜிமெயிலுக்கு வரும் மெயில்களை டிரான்ஸ்டேல் (Translate) செய்து புரிந்துக்கொள்ளலாம். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயிலை மொழிப்பெயர்ப்பது எப்படி?

  1. அதற்கு முதலில் ஜிமெயில் செயலியை திறக்க வேண்டும்.
  2. பிறகு நீங்கள் எந்த இமெயிலை மொழிப்பெயர்க்க விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பிறகு ஜிமெயில் பக்கத்தில் வலது பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு நீங்கள் எந்த மொழியில் உங்கள் இமெயிலை மொழிப்பெயர்க்க விரும்புகிறீர்களோ அந்த மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
  5. நீங்கள் மொழியை தேர்வு செய்த பிறகு அந்த இமெயில் நீங்கள் தேர்வு செய்த மொழியில் மொழிப்பெயர்க்கப்படும்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி விரைவாக உங்கள் இமெயிலை மொழிப்பெயர்ப்பு செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : இனி சிம் அக்டிவாக இல்லை என்றால் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய நடவடிக்கை!

இமெயில் மொழிப்பெயர்ப்பு குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை

  • நீங்கள் இந்த மொழிப்பெயர்ப்பு அம்சத்தை பயன்படுத்தி மொழிப்பெயர்ப்பதன் மூலம் அதனை முழுவதும் நம்பிவிடக்கூடாது. காரணம் அதில் சில பிழைகள் இருக்கலாம்.
  • இமெயில் மெஷின் டிரான்ஸ்லேஷன் செய்யப்படும் நிலையில், அது துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
  • இந்த அம்சத்தை பயன்படுத்தி ஒருமுறை ஒரு இமெயிலை மட்டுமே டிரான்ஸ்லேட் செய்ய முடியும்.
  • உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில்களை டிரான்ஸ்லேட் செய்ய வேண்டிய தேவை இருந்தால் நீங்கள் அதனை ஒவ்வொன்றாக தான் செய்து முடிக்க வேண்டும்.
  • இந்த அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் உங்கள் ஜிமெயில் செயலி அப்டேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு டிரான்ஸ்லேட் ஆப்ஷன் தோன்றவில்லை என்றால் உங்களது ஜிமெயில் செயலியை அப்டேட் செய்யுங்கள்.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி!

கூகுள் டிரான்ஸ்லேட் (Google Translate) உள்ளிட்ட வேறு ஒரு தளம் அல்லது செயலிக்கு சென்று டிரான்ஸ்லேட் செய்யும் சிரமத்தை இது குறைக்கிறது. ஆனால், இந்த அம்சத்தின் மூலம் மொழிப்பெயர்க்கும் இமெயில்களை ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்துக்கொள்வது நல்லது.

Follow Us