AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி சிம் அக்டிவாக இல்லை என்றால் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய நடவடிக்கை!

WhatsApp Takes New Action | உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், சிம் கார்டு ஆக்டிவாக இல்லை என்றால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்அப் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இனி சிம் அக்டிவாக இல்லை என்றால் வாட்ஸ்அப் செயல்படாது.. முக்கிய நடவடிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 22:39 PM IST

பொதுமக்கள் பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்காக பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இது பலருக்கும் மிகவும் அடிப்படையான செயலியாகவும் உள்ளது. அதாவது தங்களது அன்றாட வாழ்வில், பணியில் வாட்ஸ்அப் இல்லாமல் செயல்பட முடியாது என்ற நிலையில் தான் பலரும் உள்ளனர். இத்தகைய முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் ஒரு முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் இனி இதை செய்ய முடியாது

வாட்ஸ்அப் செயலியை பொருத்தவரை பதிவிறக்கம் செய்து லாக் இன் செய்ய சிம் கார்டு வேண்டும். அதன் பிறகு அந்த சிம் கார்டு செயலிழந்துவிட்டாலோ அல்லது காணாமல் போய்விட்டாலோ அந்த பயனர் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம். இது ஒரு பக்கம் நல்ல அம்சமாக இருந்தாலும், இதன் மூலம் மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் தான் வாட்ஸ்அப் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதையும் படிங்க : குரோமா கோடைக்கால சேல்.. டிசி, ஏசி-க்கு அசத்தல் தள்ளுபடி.. உடனே செக் பண்ணுங்க!

சிம் அடிப்படையிலான சரிபார்ப்பை தொடங்கிய வாட்ஸ்அப்

இவ்வாறு வாட்ஸ்அப் நிறுவனத்தில் தொடர் சிக்கல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, ஸ்மார்ட்போன்களில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால் மட்டும் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியும். சிம் கார்டு இல்லை என்றால் சமூகவலைதள செயலிகள் தானாகவே செயலிழந்துவிடும் என்று அரசு தெரிவித்தது.

இதையும் படிங்க : இந்த 4 விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இந்த விதிகளை தளர்த்த மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், வாட்ஸ்அப் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. வாபீட்டா இன்ஃபோ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்டு 2.26.8.6 பீட்டா வெர்ஷனில் இதற்கான சோதனை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி சிம் கார்டு இல்லை என்றால் அவர்களின் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us