நீங்களே உங்களது வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்கலாம்.. எப்படி தெரியுமா?
Create Custom WhatsApp Stickers | வாட்ஸ்அப் செயலியில் பல அசத்தல் அம்சங்கள் உள்ளன. அத்தகைய அம்சங்களில் ஒன்றுதான் வாட்ஸ்அப் ஸ்டிக்கர். இந்த நிலையில், ஒருவர் அவரே தனக்கு தேவையான ஸ்டிக்கர்களை உருவாக்கிக்கொள்வது எப்படி என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் என பலவற்றை ஒருவர் மற்றொருவருடன் பகிர்ந்துக்கொள்ளவும், குழுக்களுடன் பகிர்ந்துக்கொள்ளவும் வாட்ஸ்அப் பலருக்கும் விருப்பமான தேர்வாக உள்ளது. இவற்றில் பெரும்பாலான பயனர்களுக்கு பிடித்தது என்றால் அது வாட்ஸ்அப் சாட் தான். வாட்ஸ்அப் சாட்டில் நண்பர்களுடன் பேசுவதை சுவாரஸ்யமானதாக மாற்றும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் (WhatsApp Sticker) அம்சம் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் சாட்டில் பயன்படுத்த நீங்களே உங்களுக்கான ஸ்டிக்கர்களை உருவாக்கிக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சரியான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்
ஸ்டிக்கர்களை உருவாக்குவதற்கு முன்னதாக அதற்கான சரியான புகைப்படங்களை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். அந்த புகைப்படங்கள் நல்ல தரமானதாகவும், அந்த புகைப்படத்தின் பேக்கிரவுண்ட் எளிதில் அழிக்கப்பட கூடியது போன்ற புகைப்படங்களை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். பிறகு போட்டோ எடிடிங் செயலிகளை பயன்படுத்தி உங்களது புகைப்படங்களை மிக சுலபமாக எடிட் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஆன்லைன் முதலீட்டு மோசடி.. ரூ.1.29 கோடி பணத்தை இழந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
ஸ்டிக்கர் மேக்கர் செயலி பயன்படுத்துங்கள்
- கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Paly Store) சென்று ஸ்டிக்கர் மேக்கர் (Sticker Maker) செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
- செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதும், நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்துள்ள புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
- பிறகு செயலியில் இருக்கும் எடிட்டிங் அம்சங்களை கொண்டு உங்களுக்கு பிடித்த வகையில் உங்களது ஸ்டிக்கர்களை வடிவமைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : 2025 நவம்பரில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. உடனே செக் பண்ணுங்கள்!
ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்புங்கள்
- ஸ்டிக்கர்களை வடிவமைத்த பிறகு அவற்றை வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்புங்கள்.
- நீங்கள் எடிட் செய்யும் அந்த ஸ்டிக்கர் மேக்கர் செயலியில் ஆட் டூ வாட்ஸ்அப் (Add to WhatsApp) என்ற அம்சம் உள்ளதா என்பதை தேர்வு செய்யுங்கள்.
- அதனை கிளிக் செய்து நீங்கள் எடிட் செய்த ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்புங்கள்.
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி ஸ்டிக்கர் மேக்கர் செயலியில் பிடித்தமான ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பி நண்பர்களுடனான உரையாடல்களின் போது பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.