Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குரூப் மெம்பர் டேக்.. வாட்ஸ்அப் குரூப் சாட்டில் வரும் அட்டகாசமான அம்சம்!

Meta Testing New Feature in WhatsApp Group Chat | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் குரூப் மெம்பர் டேக் என்ற அம்சத்தை வாட்ஸ்அப் சாட்டில் அறிமுகம் செய்வதற்கான பணியை மெட்டா கையில் எடுத்துள்ளது.

குரூப் மெம்பர் டேக்.. வாட்ஸ்அப் குரூப் சாட்டில் வரும் அட்டகாசமான அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Nov 2025 00:02 AM IST

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக உள்ளது தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp). இந்த செயலியை தகவல் பரிமாற்றத்துக்காக பலரும் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஏராளமான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நிலையில், மெட்டா அதில் பலவேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், குரூப் உரையாடல்களை (Group Chat) மேம்படுத்தும் வகையில் தற்போது அசத்தல் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் குரூப்பில் வந்த அட்டகாசமான அம்சம்

வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு பலன் அளிக்கும் பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், வாட்ஸ்அப் குரூப் சாட்டில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது குரூப் மெம்பர் டேக் (Member Group Tag) என்ற அம்சத்தை தான் ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்காக சோதனை செய்து வருகிறது. மெட்டாவின் இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் குரூப் சாட் அம்சத்தை மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் மிகப்பெரிய குறைபாடு… 3.5 பில்லியன் வாட்ஸ்அப் எண்கள் கசிவு – அதிர்ச்சி தகவல்

குரூப் மெம்பர் டேக் அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன?

இந்த புதிய குரூப் மெம்பர் டேக் அம்சத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் குழுவில் தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். அதாவது தங்களது பெயருக்கு அருகில் பயனர்களே ஒரு சிறிய குறிப்பை எழுதிக்கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் அலுவலக குழுவில் உள்ளீர்கள் என்றால் உங்களது பெயர் பக்கத்தில் மேனேஜர், எழுத்தாளர் என நீங்கள் என்ன பணி செய்கிறீர்களோ அதனை குறிப்பிட்டுக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் விளையாட்டு குழுவில் உள்ளீர்கள் என்றால் கோச், கேப்டன் என உங்களது பெயர் பக்கத்தில் எழுதிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : அரட்டையிலும் வந்தது End To End Encryption.. இனி உங்கள் சாட் பத்திரமாக இருக்கும்!

அட்மின் அனுமதி தேவையில்லை

இந்த குரூப் மெம்பர் டேக் அம்சத்தில் பயனர்கள் தங்களது பெயர்களுக்கு அருகில் ஏதேனும் குறிப்பிட வேண்டும் என்றால் அதற்கு குரூப் அட்மினின் அனுமதி அவசியமில்லை. இந்த அம்சத்தை விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.