Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விரைவில் அறிமுகமாகும் IQOO 15 ஸ்மார்ட்போன்.. விலை பட்டியல் வெளியானது!

Price Details Released Ahead of IQOO 15 | ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் விலை பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகும் IQOO 15 ஸ்மார்ட்போன்.. விலை பட்டியல் வெளியானது!
ஐக்யூ 15 ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Nov 2025 13:30 PM IST

IQOO நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனத்தில் IQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்காக தயாராக உள்ளது. அதாவது இந்த IQOO 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 26, 2025 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில் தான் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, IQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

IQOO 15 ஸ்மார்ட்போன்களின் விலை குறித்த தகவல்கள் வெளியானது

IQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தான் அந்த ஸ்மார்ட்போனின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது.

விலை பட்டிய

  • 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட IQOO 15 ஸ்மார்ட்போன் ரூ.64,999-க்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட IQOO 15 ஸ்மார்ட்போன் ரூ.72,999-க்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட IQOO 15 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள் போக ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Wi-Fi பாஸ்வேர்டு மறந்து விட்டீர்களா.. மிக சுலபமாக ரிட்ரைவ் செய்யலாம்.. எப்படி?

IQOO 15 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த IQOO 15 ஸ்மார்ட்போன் 6.85 இன்ச் ஃபிளாட் 2K+LTPO டிஸ்பிளே அம்சத்தை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஓஐஎஸ் உடன் கூடிய 50 மெகா பிக்சல் சோனி பிரைமரி சென்சார் மற்றும் 50 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 50 மெகா பிக்சல் சோனி ப்ரோ லெவல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விட அசத்தல் அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் 15!

இந்த ஸ்மார்ட்போன் 7,000 mAh பேட்டரி அம்சத்துடன் அறிமுகமாக உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.