Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப்பில் புதுப்பொலிவுடன் அறிமுகமான About அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?

WhatsApp About Gets More Features | வாட்ஸ்அப் செயலியில் இருந்த அம்சம் தான் அபவுட். இந்த அம்சம் ஏற்கனவே பயனர்களின் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது புது பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்படி அதில் என்ன என்ன புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் புதுப்பொலிவுடன் அறிமுகமான About அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Nov 2025 15:12 PM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மெட்டா வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஏற்கனவே வாட்ஸ்அப்பில் அமலில் இருந்த அபவுட் (About) அம்சத்தை மெட்டா தற்போது புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது அறிமுகமாகியுள்ள இந்த வாட்ஸ்அப் அபவுட் அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 புதிய அம்சங்களுடன் அறிமுகமான அபவுட் அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் (Status), புரொஃபைல் புகைப்படம் (Profile Picture) ஆகியவற்றை போன்ற ஒரு அம்சம் தான் இந்த அபவுட். இந்த அம்சம் முன்பு வெறும் தகவலை மட்டுமே பரிமாறும் விதமாக இருந்தது. இந்த நிலையில் தான், இந்த அபவுட் அம்சத்தில் மேலும் பல புதிய அம்சங்களை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. முன்பு இருந்ததை போல் இல்லாமல் இந்த புதிய அபவுட் அம்சத்தில் பல அட்வான்ஸ் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விரைவில் அறிமுகமாகும் IQOO 15 ஸ்மார்ட்போன்.. விலை பட்டியல் வெளியானது!

வாட்ஸ்அப் அபவுட் அம்சத்தில் அறிமுகமாகியுள்ள அட்வான்ஸ் சிறப்புகள்

  • இந்த புதிய அம்சத்தின் மூலம் ஒருவர் என்ன வேலையாக இருக்கிறார் என்பதை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் பேச தயாராக இல்லை என்பதை நீங்கள் யாரிடமும் சொல்லாமலே இந்த அம்சம் மூலம் அவர்களுக்கு தெரியப்படுத்தி விடலாம்.
  • இந்த புதிய அபவுட் அம்சத்தின் இடமும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் புரொஃபைலுக்கு கீழே இந்த அம்சம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது புகைப்படத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த அம்சத்தின் மூலம்  ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கை கிளிக் செய்யும் பட்சத்தில் அவர் என்ன செய்கிறார், தற்போது அவருடன் பேசலாமா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஆடியோ, வீடியோ கால் உடன் எக்ஸ் தளத்தில் அறிமுகமானது சாட் அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?

முன்பு பயன்பாட்டில் இருந்த அபவுட் அம்சத்தை விடவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.