AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு… செம குஷியில் கட்சியினர்… எம்.பி. ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?

Rajya Sabha Seat To DMDK: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை திமுக தலைமை வழங்கி உள்ளது. இந்த இடத்தில் எல்.கே. சுதீஷ் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு… செம குஷியில் கட்சியினர்… எம்.பி. ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 03 Mar 2026 22:05 PM IST

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா, கனிமொழி சோமு, என். ஆர். இளங்கோ, செல்வராஜ், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் 5- ஆம் தேதி வாக்குப்பதிவுக்கான கடைசி தேதி ஆகும். இதில், திமுக வசம் 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுக வசம் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் யாருக்கு ஒதுக்கப்பட உள்ளன என்பது தொடர்பான கேள்வி எழுந்து வந்தது. இதனிடையே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை ஆகியவற்றை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைய முன்னெடுத்து வந்தது.

தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களை உறுப்பினர் சீட் ஒதுக்கீடு

இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், அந்த கூட்டணியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் முதல் முறையாக இணைந்தது. அத்துடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகள் வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதற்கு திமுக தலைமை முன் வந்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை ( மார்ச் 3) தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை திமுக தலைமை ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: திமுகவால் காங்கிரஸுக்கு அரசியல் அந்தஸ்து… திமுக தயவின்றி காங்கிரஸால்… அமைச்சர் ரகுபதி கூறிய வார்த்தை!

தேமுதிகவில் முதல் எம்.பி. ஆகும் எல். கே. சுதீஷ்?

இந்த இடத்தில் தேமுதிகவின் முன்னாள் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு தேமுதிக தலைமையிடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதன் மூலம் தேமுதிகவின் முதல் எம்.பி.யாக எல்.கே. சுதீஷ் தேர்வாக உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் வழங்குவதாக அதிமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் அதிமுக வசம் இருந்த 2 ராஜ்ய சபா உறுப்பினர் இடங்களையும் அதிமுகவை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், அதிமுக தலைமை மீது தேமுதிகவுக்கு ஒரு வித அதிருப்தி ஏற்பட்டது.

தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ராஜ்ய சபா சீட் குறித்த அறிவிப்பு

Rajya Sabha Seat To Dmdk

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு

விரைவில் சட்டமன்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

இதன் காரணமாக, தேமுதிக சேர்ந்த நபர்களிடம் கலந்தாலோசித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகத்தில், தேமுதிக இணைந்தது. அப்போது வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்ற தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Udhayanidhi Stalin Tamil Nadu Election: முதல் தேர்தலில் அமோக வெற்றி… குறுகிய காலத்தில் அரசியல் சக்தியாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

Follow Us