AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுகவால் காங்கிரஸுக்கு அரசியல் அந்தஸ்து… திமுக தயவின்றி காங்கிரஸால்… அமைச்சர் ரகுபதி கூறிய வார்த்தை!

LAW Minister Raghupathi: திமுக கூட்டணியல் அங்கம் வகித்தால் தான் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டமன்றம் செல்ல முடியும் எனவும், திமுவால் தான் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் அந்தஸ்து எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், தவெக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுகவால் காங்கிரஸுக்கு அரசியல் அந்தஸ்து… திமுக தயவின்றி காங்கிரஸால்… அமைச்சர் ரகுபதி கூறிய வார்த்தை!
திமுகவால் தான் காங்கிரஸுக்கு அரசியல் அந்தஸ்து
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 03 Mar 2026 18:36 PM IST

திமுகவின் தயவின்றி காங்கிரஸ் கட்சியால் சட்டமன்றத்துக்குள் நுழைய முடியாது எனவும், திமுகவால் தான் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்து வருவதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் தற்போது வரை தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை எதுவும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. பாஜக மற்றும் அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்ற முடிவுக்கு அவர்கள் வரவில்லை. இதில், யார் மேஜர் பார்ட்னர், யார் மைனர் பார்ட்னர் என்ற முடிவும் எட்டப்படவில்லை. மொத்தத்தில் அதிமுக கூட்டணி இடியாப்ப சிக்கலில் உள்ளது. எனவே, இந்த கூட்டணியை, திமுக கூட்டணியுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. திமுக சுமுகமான பேச்சு வார்த்தையை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் சரியான பாதையில் வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

திமுகவால் தான் காங்கிரஸுக்கு அரசியல் அந்தஸ்து

தமிழக வெற்றி கழகத்துடன், காங்கிரஸ் கட்சி திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக பலர் உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தெளிவாக உள்ளோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிப்பதால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். எனவே, காங்கிரஸ் கட்சியானது அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் தான் சட்டமன்றத்துக்குள் காங்கிரஸ் கட்சி நுழைய முடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். தமிழக வெற்றி கழகத்துடன் யாரும் கூட்டணி செல்லாததால் அங்கு வலிமை இருப்பதாக கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: “முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?” நெல்லை கொலை சம்பவத்தை சுட்டிக் காட்டி விஜய் கேள்வி..

திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. திமுக தலைமையிடம் காங்கிரஸ் கட்சி 39 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை சீட் ஆகியவற்றை கேட்டு வருகிறது. அதனுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆனால், திமுக தலைமை 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்ற சீட்டு தருவதற்கு திமுக தலைமை முன் வந்ததாக தெரிகிறது. இதனால், திமுக- காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று ப. சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் திமுகவினர்

இதில், சரியான உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் திமுக தலைமையை விமர்சிப்பதும், திமுகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி சகோதரர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இதே போல, சமீப நாட்களாக இண்டியா கூட்டணி என்ற வார்த்தையையும் மு. க. ஸ்டாலின் பயன்படுத்தாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னையில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

Follow Us