AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செங்கோட்டையன் கோட்டையில் எடப்பாடி… தீவிர பரப்புரை மேற்கொள்ள முடிவு… தேதி குறித்த அதிமுக தலைமை!

Edappadi K Palaniswami Campaign: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ள உள்ளார். இதற்கான தேதிகளையும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

செங்கோட்டையன் கோட்டையில் எடப்பாடி… தீவிர பரப்புரை மேற்கொள்ள முடிவு… தேதி குறித்த அதிமுக தலைமை!
ஈரோட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் எடப்பாடி
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 03 Mar 2026 16:40 PM IST

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை தொகுதி வாரியாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அண்மையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தனது பரப்புரை பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதனிடையே, மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க சென்றது என்பன உள்ளிட்ட அரசியல் நகர்வுகளுக்கு பிறகு மீண்டும் தனது பிரச்சார பயணத் திட்டம் குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி

இதில், வருகிற மார்ச் 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) ஈரோடு புறநகர் மேற்கு அந்தியூர் பகுதியில் மாலை 4:30 மணிக்கு தனது பரப்புரை பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதேபோல, மார்ச் 8- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு புறநகர் கிழக்கு பெருந்துறை பகுதியில் மாலை 4 மணி மற்றும் பவானி பகுதியில் மாலை 5:30 மணிக்கு பரப்புரப் பயணம் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் எழுச்சி பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?” நெல்லை கொலை சம்பவத்தை சுட்டிக் காட்டி விஜய் கேள்வி..

மக்கள் சந்திப்பு பெயரில் தேர்தல் பரப்புரை

எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்ளும் பகுதிகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கும் முன்பாகவே, அதாவது சுமார் 4, 5 மாதங்களுக்கு முன்பாகவே பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் பரப்புரை பயணத்தை தொடங்கி விட்டனர்.

தேர்தல் பரப்புரையை முன்னெடுக்கும் கட்சிகள்

இதில், அதிமுக, திமுக, தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. தற்போது, சட்டமன்ற தேர்தல் மிகவும் நெருங்கி உள்ள நிலையில், தங்களது தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதற்கான பிரச்சார திட்டத்தை தயார் செய்யும் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான, பிரச்சார வாகனங்கள், கட்சி கொடிகள் ஆகியவை தயார் செய்யும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: Anna Nagar Constituency Election 2026: அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி.. அதிமுக vs திமுக இடையே இருக்கும் போட்டி..

Follow Us