AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை அசோக் நகர் பகுதியில் 7,884 சதுர அடி பரப்பளவில், 2 தளங்களுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இங்கு வாசகர் அரங்குகள், டிஜிட்டல் நூலக வசதி, இலவச வைஃபை, தனி வாசிப்பு அறைகள், போட்டித் தேர்வு பயிற்சி புத்தகங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Mar 2026 13:02 PM IST

சென்னை, மார்ச் 3, 2026: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் ரூ.12.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ மற்றும் நவீன நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.16.87 கோடி செலவில் 9 முதல்வர் படைப்பகங்கள் கொண்ட நவீன நூலகங்களையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.24 கோடி செலவில் 1 முதல்வர் படைப்பகத்துடன் கூடிய நவீன நூலகத்தையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

முதல்வர் படைப்பகம்:

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் பயிலவும், புத்தொழில் தொடங்குவோர் தங்களுக்கான அலுவலக வசதியை மலிவான கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் 2024ஆம் ஆண்டு முதன்முறையாக கொளத்தூரில் ‘முதல்வர் படைப்பகம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் படிக்க: வங்கி கணக்கில் ரூ.4,000 வரவு வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

தற்போது, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 30 இடங்களிலும், சென்னை மாநகராட்சி சார்பில் 8 இடங்களிலும் இப்படிப்பகங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்:

அந்த வகையில், சென்னை அசோக் நகர் பகுதியில் 7,884 சதுர அடி பரப்பளவில், 2 தளங்களுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இங்கு வாசகர் அரங்குகள், டிஜிட்டல் நூலக வசதி, இலவச வைஃபை, தனி வாசிப்பு அறைகள், போட்டித் தேர்வு பயிற்சி புத்தகங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: “முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?” நெல்லை கொலை சம்பவத்தை சுட்டிக் காட்டி விஜய் கேள்வி..

இந்தத் திட்டம் நகர்ப்புற இளைஞர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும், திறன் மேம்பாட்டிற்கும், சிறு தொழில் முயற்சிகளுக்கும் பெரும் ஆதரவாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us