Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரட்டையிலும் வந்தது End To End Encryption.. இனி உங்கள் சாட் பத்திரமாக இருக்கும்!

End To End Encryption In Arattai App | சோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி சமீபத்தில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை முந்தியது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் இருப்பதை போலவே அதில் End To End Encryption அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரட்டையிலும் வந்தது End To End Encryption.. இனி உங்கள் சாட் பத்திரமாக இருக்கும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Nov 2025 22:07 PM IST

சோஹோ (Zoho) நிறுவனத்தின் அரட்டை செயலி (Arattai App) பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் பல புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அரட்டை செயலிக்கு பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் உள்ளதை போல End To End Encryption அம்சம் தான் அரட்டை செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறுத்து விரிவாக பார்க்கலாம்.

அரட்டை செயலியில் அறிமுகமான புதிய அம்சம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சோஹோ நிறுவனம் அரட்டை செயலியை அறிமுகம் செய்தது. இது வாட்ஸ்அப், சிக்னல் போன்ற தகவல் பரிமாற்ற செயலி ஆகும். இந்த செயலி அறிமுகமான ஒருசில நாட்களிலேயே அது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக தொடங்கியுள்ளது. குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியையே இந்த அரட்டை செயலி முந்தியது. அதாவது பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற சாதனை படைத்தது.

இதையும் படிங்க : நீங்களே உங்களது வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்கலாம்.. எப்படி தெரியுமா?

அரட்டை செயலியில் அறிமுகமாக End To End Encryption

அரட்டை செயலி பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிய நிலையில், அதில் பல்வேறு அசத்தல் அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் தான் தற்போது End To End Encryption அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களின் சாட் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதாவது அரட்டை செயலியில் குறுஞ்செய்தி அனுப்பும் நபர் மற்றும் அதனை பெறும் நபர் ஆகிய இருவருக்கும் இடையில் மட்டும் அந்த உரையாடல் பாதுகாக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் சிக்கல்.. வாட்ஸ்அப்பில் செய்யும் இந்த ஒரு மாற்றம் பயனுள்ளதாக இருக்கும்!

இந்த அம்சம் 1.33.6 வெர்ஷனுக்கு மேல் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், 1.17.23 வெர்ஷனுக்கு மேல் உள்ள ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 1.0.7 வெர்ஷனுக்கு மேல் உள்ள டெஸ்டாப்களில் இது அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.