உங்கள் லேப்டாப் அடிக்கடி வெப்பாமாகுதா?.. இந்த சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!
How To Control Over heating Laptops | பெரும்பாலான நபர்கள் தங்களது லேப்டாப்கள் அதிக வெப்பமாகும் சிக்கலை சந்திக்கின்றனர். இதனால், லேப்டாப் வெடிக்கும் அளவுக்கு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், லேப்டாப்பை சீராக பயன்படுத்தி அதிக வெப்பமாவதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் லேப்டாப் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பலரும் வேலை, படிப்பு, விளையாட்டு ஆகியவற்றுக்காக தினமும் லேப்டாப்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தினமும் பயன்படுத்தும்போது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் தான் லேப்டாப் அதிக வெப்பமாவது. இவ்வாறு லேப்டாப் அடிக்கடி வெப்பமாவதன் மூலம் அது வெடிக்கும் அளவுக்கு கூட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், லேப்டாப் சூடாவதை தடுத்து அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
லேப்டாப்புக்கான காற்று ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும்
உங்கள் லேப்டாக் அதிக சூடாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு காற்று ஒட்டம் மிகவும் அவசியம் ஆகும். ஒருவேளை நீங்கள் காற்று ஓட்டம் இல்லாத பகுதியில் உங்களது லேப்டாப்பை வைத்து வேலை செய்தால் வெப்பம் அதனுள்ளேயே தங்கிவிடும். பெரும்பாலானவர்கள் மெத்தை, சோபா ஆகியவற்றின் மீது வைத்து லேப்டாப் பயன்படுத்தும் நிலையில் இந்த சிக்கல் ஏற்படுகிறது. எனவே நல்ல காற்றோட்டம் மிகுந்த இடங்களில் வைத்து உங்களது லேப்டாப்களை பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க : கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இனி ஸ்பேம் தொல்லை இல்லை.. வந்தது அசத்தல் அம்சம்!




தூசி படியாமல் பாதுகாக்க வேண்டும்
நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினாலும் அதில் தூசி படிவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதனை கவனிக்காமலே விட்டுவிடும் பட்சத்தில் ஃபில்டர்கள், பேன் பிளேடுகள் ஆகியவற்றின் செயல்திறன் குறைய தொடங்கிவிடும். இதன் மூலம் நீங்கள் சிறிது நேரம் லேப்டாப் பயன்படுத்தினாலே அது அதிக வெப்பத்திற்கு வழிவகுத்துவிடும். எனவே இந்த சிக்கலை தவிர்க்க அவ்வப்போது உங்களது லேப்டாப்பை சுத்தம் செய்யுங்கள்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் புதுப்பொலிவுடன் அறிமுகமான About அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?
லேப்டாப்பின் லோடை குறையுங்கள்
பெரும்பாலான நபர்கள் தங்களது லேப்டாப்பில் அதிகப்படியான செயலிகள், டேப்கள் ஆகியவற்றை பயன்படுத்துவர். இவை அதிகப்படியான இடத்தை பிடித்துக்கொள்ளும். இதனால் ஸ்டோரேஜ் குறைந்து லேப்டாப்பின் செயல் திறன் வெகுவாக பாதிக்கும் அம்சம் உள்ளது. எனவே உங்களது லேப்டாப்பில் உள்ள தேவையற்ற செயலிகள், ஃபைல்கள் ஆகியவற்றை அவ்வப்போது நீக்கம் செய்வதன் மூலம் எந்த வித சிக்கலும் இல்லாமல் உங்களால் லேப்டாப்பை பயன்படுத்த முடியும்.