Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அசத்தல் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான மோட்டோ ஜி57 பவர்!

Moto G57 Power Smartphone Launched in India | மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி57 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அசத்தல் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான மோட்டோ ஜி57 பவர்!
மோட்டோ ஜி57 பவர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Nov 2025 19:20 PM IST

லெனோவா (Lenovo) நிறுவனத்தின் மோட்டரோலா (Motorola) ஸ்மார்ட்போன்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவையாக உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில், சிறந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படுவதால் பெரும்பாலான பொதுமக்கள் மோட்டரோலா ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் மோட்டரோலா நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போனை (Motorola G57 Power Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போன்

இந்த மோட்டோரோலா ஜி57 ஸ்மார்ட்போனில் 6.72 இச்ன் Full HD + LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனின் பிரைட்னஸ் 1050 நிட்ஸ் பிரைட்னஸ் வரை இருக்கும் என்று மோட்டோரோலா தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கம் கொரில்லா கிளாஸ் 7i அம்சத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 பிராசசரை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் புதுப்பொலிவுடன் அறிமுகமான About அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா செட் அப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின்  முன் பக்கத்தில் 8 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அது 2கே வீடியோக்களை பதிவு செய்ய பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 7,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள நிலையில், இது 33 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.

மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போன் – விலை என்ன?

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் ஆரம்ப கால சலுகைகள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் வெறும் ரூ.12,999-க்கே வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 03, 2025 அன்று பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இணையதளங்களில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.