Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஐபோன் ஏர்-க்கு அசத்தல் தள்ளுபடி.. வெறும் ரூ.54,900-க்கே வாங்கிக்கொள்ளலாம்!

iPhone Air Smartphone at Half Rate | ஐபோன் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஐபோன் ஏர் ஸ்மார்ட்போன் குரோமா பிளாக் பிரைடே சேலில் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் ஏர்-க்கு அசத்தல் தள்ளுபடி.. வெறும் ரூ.54,900-க்கே வாங்கிக்கொள்ளலாம்!
ஐபோன் ஏர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Nov 2025 13:39 PM IST

ஆப்பிள் (Apple) நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில்,  சமீபத்தில் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (iPhone 17 Series Smartphones) அறிமுகமாகின. அந்த சீரீசில் அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் ஐபோன் ஏர் (iPhone Air). இதுதான் இதுவரை அறிமுகம் செய்யப்ப்பட்ட ஐபோன்களில் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஈர்ப்பை பெற்றுள்ள நிலையில், தற்போது அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது க்ரோமா பிளாக் பிரைடே சேலில் (Croma Black Friday Sale) இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.54,900-க்கே வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில், ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனுக்கான குரோமா சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

குரோமே பிளாக் பிரைடே சேலில் ஐப்போன் ஏர் ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி

குரோமா தனது பிளாக் பிரைடே சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் நவம்பர் 22, 2025 அன்று தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 30, 2025 அன்று முடிவடைய உள்ளது. இந்த சேலில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1,39,900 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.54,900-க்கு வழங்கப்படுகிறது. வங்கி சலுகைகள் உள்ளிட்ட இதற சலுகைகளை பெறும் பட்சத்தில் உங்களால் இந்த விலைக்கு ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

இதையும் படிங்க : அரட்டையிலும் வந்தது End To End Encryption.. இனி உங்கள் சாட் பத்திரமாக இருக்கும்!

ஐபோன் ஏர் ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஐபோன் ஏர் ஸ்மார்ட்போன் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போலவே ஏ19 ப்ரோ சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மெல்லியது என கூறப்பட காரணம், இது 5.6 மில்லி மிட்டர் தடிமன் மற்றும் 156 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஐபோன் 17 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்பட்டுள்ள அம்சம் தான். ஐபோன் 17 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக பல்வேறு அசத்தல் அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை பாதி விலைக்கு குரோமா சேலில் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.