Google Map : நெட்வொர்க் இல்லாமலே கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்.. இந்த அம்சம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
Use Google Maps Online | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் கூகுள் மேப்ஸ் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், நெட்வொர்க் இல்லாமல் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதெல்லாம் பெரும்பாலான நபர்கள் தெரிந்த பகுதிகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றாலும் கூகுள் மேப்ஸை (Google Maps) தான் பயன்படுத்துகின்றனர். காரணம், கூகுள் மேப்ஸில் ஒரு இடத்திற்கு செல்வதற்கான வழி மட்டுமல்லாமல், செல்லும் வழியில் எந்த அளவு வாகன போக்குவரத்து நிலவுகிறது என்பதை கூட தெரிந்துக்கொள்ள முடியும். இவ்வாறு கூகுள் மேப்ஸ் பல்வேறு அம்சங்களை கொண்டு இருக்கும் பட்சத்தில் பலரும் கூகுள் மேப் பயன்படுத்துக்கின்றனர். கூகுள் மேப் பயன்படுத்த நெட்வொர்க் தேவை என்பது தெரியும். ஆனால், நெட்வொர்க் இல்லாமலே கூகுள் மேப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நெட்வொர்க் இல்லாமல் கூகுள் மேப் பயன்படுத்தலாம்
நீங்கள் அவசரமாக ஒரு இடத்திற்கு பயணம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். அப்போது உங்களது கூகுள் மேப்ஸ் நெட்வொர்க் சிக்கலால் செயல்படாமல் போய்விடுகிறது. அப்போது எப்படி இருக்கும். இத்தகைய சூழல்களை சமாளிக்க தான் கூகுள் மேப்ஸ் செயலியில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது நெட்வொர்க் இல்லாமலே உங்களால் கூகுள் மேப்ஸை பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க : அமேசான் பிளாக் ஃபிரைடே சேல்.. மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்!




நெட்வொர்க் இல்லாமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம்
- அதற்கு முதலில் உங்களது கூகுள் மேப்ஸ் செயலிக்குள் செல்ல வேண்டும்.
- அதில் உங்களது புகைப்படத்தை கிளிக் செய்து உங்கள் ஃபுரொபைலுக்குள் (Profile) செல்ல வேண்டும்.
- அதில் ஆஃப்லைன் மேப்ஸ் (Offline Maps) என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் எந்த பகுதிக்கு செல்ல உள்ளீர்களோ அந்த இடத்திற்கான மேப்பை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு அந்த பகுதியை மார்க் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : 106.286 கிலோ மீட்டரகள் நடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ரோபோ!
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பயன்படுத்தி நெட்வொர்க் வசதி இல்லாதபோதும் மேப்பை பயன்படுத்தும் வகையில் நீங்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு வைஃபை மற்றும் மொபைல் டேட்டா என எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.