Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புதிய போன் வாங்கியிருக்கீங்களா? அப்போ இதை செய்ய மறக்காதீங்க!

Tech Tips : இப்போதெல்லாம், மக்கள் அதிக விலை கொண்ட போன்களை வாங்குகிறார்கள். சில வருடங்களுக்கு அவற்றைப் புதியதாக வைத்திருக்க, அதனை முறையாக பராமரிப்பது முக்கியம். இந்த குறிப்புகள் உங்கள் போனை நீண்ட காலத்திற்குப் புதியதாக வைத்திருக்க உதவும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய போன் வாங்கியிருக்கீங்களா? அப்போ இதை செய்ய மறக்காதீங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Nov 2025 22:26 PM IST

சமீப காலமாக, விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கான (Smartphone) தேவை அதிகரித்துள்ளது. மக்கள் இப்போது ஒரு முறை முதலீடு (Investment) செய்து, விலையுயர்ந்த போன்கள் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம், ஸ்மார்ட்போன்கள் தற்போது மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த போன்களை நாம் முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம். இதைச் செய்ய, உங்கள் போனை வாங்கியவுடன் அதை நீண்ட காலம் நீடிக்கச் செய்ய சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தேவையற்ற அம்சங்களை நீக்கலாம்

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய போன்களில் பல அம்சங்கள் மற்றும் அனிமேஷன்களை வழங்குகின்றன. அனைத்து பயனருக்கும் எல்லா வசதிகளும் அனிமேஷனும் தேவைப்படாது. எனவே, மிகவும் தேவையான அம்சங்கள் மற்றும் அனிமேஷன்களைத் தவிர மற்ற அனைத்தையும் நீக்கலாம். அல்லது செயலிழக்க செய்யலாம். இது உங்கள் போனின் ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரியை பாதுகாக்கும்.

இதையும் படிக்க : அபாயத்தில் கூகுள் குரோம் பயனர்கள் – மத்திய அரசு எச்சரிக்கை

தேவையற்ற அம்சங்களை நீக்குவது போல, உங்கள் ஸ்மார்ட்போன்களில் தேவையற்ற செயலிகளை அகற்றவும். புதிய ஸ்மார்ட்போன்களில் உங்களுக்குத் தேவையில்லாத பல செயலிகள் கொடுக்கப்பட்டிருக்கும. எனவே உங்களுக்குத் தேவையில்லாதவற்றை  நீக்கவும். அதேபோல், உங்கள் போன் கொஞ்சம் பழையதாகும்போது, ​​நீங்கள் அவற்றைப் பயன்படுத்தாவிட்டால் ஆரம்பத்தில் நிறுவப்பட்ட சில செயலிகளை அகற்றவும். இது உங்கள் டேட்டா அந்த செயலிகளுக்கு மாற்றப்படுவதைத் தடுக்கும். மேலும் ஸ்டோரேஜும் காலியாகும்.

சாஃப்ட்பேர் அப்டேட் செய்ய மறக்காதீர்கள்

உங்கள் போன் சாஃப்ட்வேரை மற்றும் செயலிகளை எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட நிலையில் வைத்திருங்கள். இந்த வழியில் நீங்கள் பாதுகாப்பு பிழைகளைத் தவிர்த்து, புதிய அம்சங்களைப் பெறுவீர்கள். கூகிள் போன்ற நிறுவனங்கள் தற்போது ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் மேம்படுத்தல்களை வழங்குகின்றன, இது உங்கள் தொலைபேசி ஆண்டுதோறும் புதிய அம்சங்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.

இதையும் படிக்க : கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இனி ஸ்பேம் தொல்லை இல்லை.. வந்தது அசத்தல் அம்சம்!

தரமான போன் கவர்களை பயன்படுத்துங்கள்

பலர் தங்கள் போனின் ஸ்கிரீன் புரொடக்டர் மற்றும் கவர்களை பயன்படுத்துவதை விரும்புவதில்லை. அவை தொலைபேசியின் தோற்றத்தை பாதிக்கும் அல்லது அதை பருமனாகக் காட்டுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். இது உண்மைதான் என்றாலும்,  ஸ்கீரின் புரொடக்டர்கள் மற்றும் கவர்கள் உங்கள் போனில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க முடியும். அவை அது எப்போதும் புதிது போல பராமரிக்க உதவும்.

காப்பீடு

உங்கள் போனை முறையாக பராமரிக்க விரும்பினால், நிபுணர்கள் நல்ல காப்பீட்டில் முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர். ஒரு நல்ல  போன் இன்சூரன்ஸிற்கு  ஒரு முறை மட்டுமே முதலீடு தேவைப்படும். அதன் பிறகு, நீங்கள் அந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்த விரும்பும் வரை தொலைபேசி பாதுகாப்பிற்காக கூடுதல் பணம் செலவிட வேண்டியதில்லை.