AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐயப்ப பக்தர்களை குறி வைத்து நடக்கும் மோசடி.. கேரளா போலீசார் எச்சரிக்கை!

Sabarimala Devotees Scammed Through Fake Website | கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், அதனை பயன்படுத்தி போலி இணையதளங்கள் மூலமாக மோசடிகள் நடைபெறுவதாக கேரளா காவல்துறை எச்சரித்துள்ளது.

ஐயப்ப பக்தர்களை குறி வைத்து நடக்கும் மோசடி.. கேரளா போலீசார் எச்சரிக்கை!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Nov 2025 20:50 PM IST

திருவனந்தபுரம், நவம்பர் 30 : கேரள (Kerala) மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு (Sabarimala Ayyappan Temple)  இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர். அவ்வாறு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஓய்வு எடுக்க ஏராளமான அறைகள் உள்ளன. இந்த அறைகள் அனைத்தும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதை போலவே பக்தர்கள் இந்த அறைகளில் தங்குவதற்கும் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ளும் மோசடிக்காரர்கள் அதன் மூலம் பக்தர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களை குறிவைத்து மோசடி

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஓய்வு எடுக்க அறைகளை முன்பதிவு செய்யும் நிலையில், அந்த அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக போலி இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பத்தினம்திட்டா சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அந்த இணையதளங்கள் மூலம் அறைகள் முன்பதிவு செய்து பணத்தை இழந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : ஆந்திரா அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

அந்த போலி இணையதளம் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். sannidanamguesthouse.in என்ற அந்த போலி இணையதளத்தில் அரியானாவை சேர்ந்த ஹமீது என்பருடைய செல்போன் எண்ணும் மற்ற ஒரு நபருடைய செல்போன் எண்ணும் இணைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். ஒருவருடைய செல்போன் எண் மற்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐயப்ப பக்தர்களே… விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

ஐயப்ப பக்தர்களுக்கு காவல்துறை அறிவுரை

இந்த மோசடி சம்பவம் ஐயப்ப பக்தர்கள் மற்றும் காவல்துறை மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற போலி இணையதளங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Follow Us