Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பணம் சம்பாதிக்க மகளையே விபச்சாரத்திற்கு தள்ளிய தாய்.. சிறுமி பகீர் வாக்குமூலம்!

10 Grade Student Forced Into Prostitution | மும்பையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அவரது தாயார் பண சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பணம் சம்பாதிக்க மகளையே விபச்சாரத்திற்கு தள்ளிய தாய்.. சிறுமி பகீர் வாக்குமூலம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Nov 2025 08:36 AM IST

மும்பை, நவம்பர் 28 : மராட்டிய (Maharashtra) மாநிலம், மும்பை நகரை சேந்தவர் 10 ஆம் வகுப்பு மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தனது தாயும், பக்கத்து வீட்டுக்காரரும் இணைந்து தன்னை விபச்சார தொழில் செய்ய வைத்து பணம் சம்பாதிப்பதாக பகீர் தகவலை கூறியுள்ளார். இதனை கேட்டு காவலர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்

2025, ஏப்ரல் மாதம் முதல் சிறுமிக்கு இந்த கொடுமை நடைபெற தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர்கல் தொடர்ந்து தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த நிலையில், ஒரு கட்டத்தில் சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது தோழியின் வீட்டில் மூன்று நாட்கள் அவர் தங்கியிருந்துள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை கடுமையாக தாக்கி அவர்கள் மீண்டும் பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளனர்.

இதையும் படிங்க : அடிக்கடி மது குடித்துவிட்டு தொல்லை கொடுத்து வந்த கணவன்.. பெட்ரோல் ஊற்றில் கொலை செய்த மணைவிகள்!

பள்ளி நிர்வாகம் மூலம் வெளிவந்த உண்மை

இந்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி நடந்த அனைத்தையும் தனது தோழியிடம் கூறியுள்ளார். பிறகு, தனது பள்ளி ஆசிரியை இடமும் அவர் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு அது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் படி, பள்ளிக்கு வந்த போலீசார், மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மாணவி தனதுக்கு நடைபெற்ற அனைத்து கொடுமைகளையும் விரிவாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்.. சிறுமி விபரீத முடிவு!

மாணவியின் புகாரின் அடிப்படையில் மாணவியின் தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது மகளை விபச்சாரத்திற்கு பயன்படுத்தி பணம் சம்பாதித்தது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.