AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடிக்கடி மது குடித்துவிட்டு தொல்லை கொடுத்து வந்த கணவன்.. பெட்ரோல் ஊற்றில் கொலை செய்த மணைவிகள்!

Wives Killed Husband In Hyderabad | ஹைதராபாத்தில் மலவத் என்ற நபர் இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் அவ்வப்போது குடித்துவிட்டு தனது மனைவிகளை தாக்கி வந்த நிலையில், அவர்கள் இருவரும் திட்டமிட்டு மலவத்தை கொலை செய்துள்ளனர்.

அடிக்கடி மது குடித்துவிட்டு தொல்லை கொடுத்து வந்த கணவன்.. பெட்ரோல் ஊற்றில் கொலை செய்த மணைவிகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Nov 2025 20:24 PM IST

ஹைதராபாத், நவம்பர் 25 : தெலங்கானா (Telangana) மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் மலவத் மோகன். கூலி தொழிலாளியாக இருந்த இவருக்கு கவிதா மற்றும் சங்கீதா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த மலவத் மோகன் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவிகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன்படி, நவம்பர் 23, 2025 அன்று அவர் வழக்கம் போல மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தனது இரண்டு மனைவிகளையும் மிக கடுமையாக தாக்கி அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திவிட்டு சென்றுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி கணவனை எரித்து கொலை செய்த மனைவிகள்

இந்த நிலையில் வீட்டில் வைத்து பூட்டப்பட்ட அந்த பெண்களை அக்கம் பக்கத்து வீட்டார் மீட்டுள்ளார். இவ்வாறு மலவத் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், அந்த இரண்டு பெண்களும் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் தங்களது கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதற்காக அவர்கள் அதிகாலையிலே பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : புதிய தொழிலாளர் குறியீடுகள் சொல்வது என்ன? இதில் ஒருவரின் அடிப்படை சம்பளம் பாதிக்குமா? யார் பயன் பெறுவார்கள்?

மலவத் எப்படியும் குடித்துவிட்டு வருவார் அவரை கொலை செய்துவிடலாம் என அந்த பெண்கள் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி அவர் குடித்துவிட்டு வந்து தூங்கிக்கொண்டு இருந்த நிலையில் , அந்த இரண்டு பெண்களும் இணைந்து மலவத் மீது பெட்ரோல் ஊற்றில் உயிருடன் கொலுத்தியுள்ளனர். இதனால் உடல் முழுவதும் தீ காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் அலறி துடித்துள்ளார். உடல் முழுவதுமாக எரிந்த நிலையில் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : ரூ.262 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

இரண்டு மனைவிகளையும் வலைவீசி தேடி வரும் போலீசார்

மலவத் உயிரிழந்த நிலையில் அவரது இரண்டு மனைவிகளும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரது இரண்டு மனைவிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow Us