Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.262 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

262 Crore Methamphetamine Seized in Delhi | இந்தியாவில் நாளுக்கு நாள் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள சாதர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சுமார் ரூ.262 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.262 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Nov 2025 23:08 PM IST

புதுடெல்லி, நவம்பர் 24 : டெல்லியில் (Delhi) உள்ள சாதர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு அதிகாரிகளும் அந்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மெத்தப்பெட்டமைன்

அந்த வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அதில், வீட்டில் அதிக அளவு மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மெத்தபெட்டமைன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை மதிப்பிட்டுள்ளனர். அதில் சுமார் 328 கிலோ மெத்தபெட்டமைன் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.262 கோடி என்பதையும் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : திடீரென பெப்பர் ஸ்பிரே தாக்குதல்.. டெல்லி காற்று மாசு போராட்டத்தில் ஷாக்கான போலீசார்!

பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்த அதிகாரிகள்

கோடிகணக்கான மதிப்பு கொண்ட மெத்தபெட்டமைன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை பதுக்கி வைத்திருந்த வீட்டில் இருந்த பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த வீட்டில் நாகாலாந்தை சேர்ந்த பெண் இருந்த நிலையில், நாகாலாந்து போலீசாரின் உதவியுடன் அவரை கைது செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற போதைப்பொருள் சிக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : விங் கமாண்டர் மரணம்… மனைவியாகவும், விமானப்படை அதிகாரியாகவும் அஞ்சலி… சோகத்தில் மூழ்கிய கிராமம்

அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு

இந்த விவகாரத்தில் போதைப்பொருள் அதிகாரிகள் மற்றும் டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருள் விவகாரத்தில் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டுள்ள மற்றவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளி வெளிநாட்டில் இருந்து இயங்கி வருவதாகவும், அவர் வேறு ஒரு போதைப்பொருள் வழக்கிலும் தேடப்பட்டு வருவதாகவும்  அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.