Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தேஜஸ் விபத்தில் பலியான விங் கமாண்டர்.. சோகத்தில் மூழ்கிய அவரது சொந்த கிராமம்!

Tejas Crash at Dubai Air Show 2025 | துபாயில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையை சேர்ந்த தேஜஸ் விமானம் பங்கேற்றது. இந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதனை இயக்கிய விங் கமாண்டர் பரிதாபமாக பலியாகினார்.

தேஜஸ் விபத்தில் பலியான விங் கமாண்டர்.. சோகத்தில் மூழ்கிய அவரது சொந்த கிராமம்!
பலியான விங் கமாண்டர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Nov 2025 12:24 PM IST

தர்மசாலா, நவம்பர் 22 : துபாய் ஏர் ஷோ 2025 (Dubai Air Show 2025) விமான சாகச நிகழ்ச்சியில் நேற்று (நவம்பர் 21, 2025) தேஜஸ் விமானம் (Tejas Aircraft) கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விங் கமாண்டர் நமன் சயால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமன் சயால் மரணம் நாட்டையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், அவரது சொந்த ஊர் கிராம் மக்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். விங் கமாண்டருக்காக அவர்கள் துக்கம் அனுசரித்து வரும் நிலையில், அவர் குறித்த சில உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேஜஸ் விமான விபத்தில் பலியான விங் கமாண்டர்

துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமான கண்காட்சி நவம்பர் 17, 2025 அன்று தொடங்கி, நவம்பர் 21, 2025 அன்று முடிவடைந்தது. இந்த நிலையில், கண்காட்சியின் கடைசி நாளான நேற்று இந்திய விமானப்படையின் மிகவும் திறன் வாய்ந்த தேஜஸ் விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விங் கமாண்டர் நமன் சயால் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க : திடீரென அதிர்ந்த பூமி.. கொல்கத்தாவில் நிலநடுக்கம்.. விவரம்!

கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்

சோகத்தில் மூழ்கிய விங் கமாண்டரின் கிராமம்

34 வயதான அந்த விங் கமாண்டர் படியல்கார் கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவியும் இந்திய விமானப்படையில் உள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். நமன் சயால் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. மகளுக்கும் கத்தி குத்து!

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.