Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெரு நாய் கடித்த மாட்டின் பாலை குடித்த கிராம மக்கள்.. 160 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி!

Rabies Vaccine For 160 Villagers | உத்தர பிரதேசத்தில் உள்ள ராம்திக் கிராமத்தில் தெருநாய் கடித்த பசு மாட்டின் பாலை பொதுமக்கள் குடித்துள்ளனர். அந்த மாடு திடீரென உயிரிழந்த நிலையில், மாட்டின் பாலை குடித்த 160 கிராம மக்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தெரு நாய் கடித்த மாட்டின் பாலை குடித்த கிராம மக்கள்.. 160 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Nov 2025 08:05 AM IST

லக்னோ, நவம்பர் 20 : கடந்த காலங்களில் ரேபிஸ் (Rabies) தொற்று காரணமாக குழந்தைகள், முதியவர்கள் என பலரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதனால், சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தெரு நாய்களுக்கு எதிர்ப்பாக பலர் இருந்தாலும், சிலர் தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தெரு நாயால் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தெரு நாய் கடித்த பசு மாட்டின் பாலை ஊர் மக்களுக்கு வழங்கிய விவசாயி

உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்திக் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பசு மாடு வளர்த்து வந்துள்ளார். அந்த பசு மாட்டை மூன்று மாதங்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இதற்கிடையே அந்த கிராமத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு வெறிநாய் கடித்த அந்த பசு மாட்டின் பாலை விவசாயி வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : 2 பிள்ளைகளை ஆற்றில் தள்ளி கொலை செய்த தந்தை.. தானும் தற்கொலை!

பசு மாட்டின் பாலை குடித்த 160 பேருக்கு தடுப்பூசி

இந்த நிலையில், வெறி நாய் கடித்த பசுமாடு திடீரென உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக அந்த பசு மாடு ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் சுகார துறையின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெறிநாய் கடித்த பசு மாட்டின் பாலை குடித்த 160 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முத்தம் கொடுக்க வந்த கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பிய காதலி.. ஷாக் சம்பவம்!

ரேபிஸ் தொற்றுக்கு மருத்துகள் எதுவும் இல்லாததால் அது உயிருக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்திய நபர்களையும் இந்த ரேபிஸ் தொற்று பாதித்து உயிரிழப்புகளை ஏற்படுத்து வருகிறது. இந்த நிலையில், தெருநாய் கடித்த பசு மாட்டின் பாலை கிராம மக்கள் குடித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.