Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உபி கல்குவாரி விபத்து.. 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 8 பேரின் உடல்கள் கைவிடப்பட்டது!

UP Stone Quarry Accident Killed 15 in UP | உத்தர பிரதேசத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது அது திடீரெ சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 ஊழியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

உபி கல்குவாரி விபத்து.. 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 8 பேரின் உடல்கள் கைவிடப்பட்டது!
விபத்து நடைபெற்ற இடம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Nov 2025 08:51 AM IST

லக்னோ, நவம்பர் 19 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால், தினத்தோறும் அந்த குவாரியில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில், நவம்பர் 15, 2025 அன்று வழக்கம் போல அங்கு சில ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கோர சம்பவம் ஒன்று நடைபெற்றது.

கல்குவாரியில் திடீரென சரிந்து விழுந்த பாறைகள்

ஊழியர்கள் கல்குவாரியில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது திடீரென அதில் இருந்து பாறைகள் சரிந்து விழ தொடங்கியுள்ளன. இந்த விபத்தில் குவாரியில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஊழியர்கள் 15 பேர் பாறை இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு குழுவினர், உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க :டிஜிட்டல் கைது’ மோசடி; ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.32 கோடி அபேஸ்

4 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணி – 7 பேர் சடலமாக மீட்பு

நவபர் 15, 2025 அன்று இந்த குவாரி விபத்து சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில், தொடர்ந்து நான்கு நாட்களாக அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி, கல்குவாரியில் 15 தொழிலாளர்களில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : கத்தியுடன் இருவரை ஓட ஓட விரட்டி குத்த முயற்சி.. விமான நிலையத்தில் பரபரப்பு

தோல்வியில் முடிந்த மீட்பு பணிகள்

கல்குவாரியில் சிக்கிய 15 ஊழியர்களில் நான்கு நாட்களாக போராடி 7 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், பாறை இடிபாடுகளை அகற்ற முடியாததால் மீட்பு பணிகளை கைவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மீதமுள்ள 8 பேரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தோல்வியை தழுவியுள்ளனர்.