Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு – உமர் நபியின் முக்கிய உதவியாளர் கைது…. வெளியான புகைப்படம்

Delhi Blast Investigation : டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான உமர் நபியின் உதவியாளர் ஜசீர் பிலால் வானி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ட்ரோன்களை மாற்றியமைத்து,  தீவிரவாத தாக்குதல்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக தேசிய விசாரணை ஆணையமான என்ஐஏ கைது செய்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு –  உமர் நபியின் முக்கிய உதவியாளர் கைது…. வெளியான புகைப்படம்
டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி ஜசீர் பிலால் வானி
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Nov 2025 16:11 PM IST

புதுடெல்லி, நவம்பர் 18: டெல்லி (Delhi) செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10,2025 அன்று நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதலை நடத்தி 15 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான டாக்டர் உமர் நபியின் நெருங்கிய உதவியாளரான ஜசீர் பிலால் வானியின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீரில் (Jammu Kashmir) உள்ள ஆனந்த்நாக் மாவட்டம், காஜிகுண்ட் பகுதியைச் சேர்ந்த ஜசீர் பிலால் வானி, ட்ரோன்களை மாற்றியமைத்து,  தீவிரவாத தாக்குதல்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக தேசிய விசாரணை ஆணையமான என்ஐஏ கைது செய்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கின் பின்னணி

கடந்த நவம்பர் 10, 2025  அன்று மாலை, மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ஹூண்டாய் i20 கார் செங்கோட்டை அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த காரை ஓட்டியவர் புல்வாமாவைச் சேர்ந்த 28 வயது டாக்டர் உமர் நபி என்று டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

ஜசீரை கைது செய்து அழைத்துவரும் போலீசார்

 

இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்… உமர் நபியின் நண்பரை கைது – கார் பறிமுதல்

ஒயிட் காலர் தீவிரவாத முறையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது நன்கு படித்து சமூகத்தில் பொறுப்புள்ள வேலையில் இருப்பவர்கள் மூலம் இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணையில், சுமார் 2,9000 கிலோ வெடி பொருட்கள் மீட்கப்ப்டடு, 3 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

யார் இந்த ஜசீர் பிலால் வானி

இந்த நிலையில் நவம்பர் 18, 2025 அன்று திங்கட்கிழமை இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்திருக்கிறது. அதன்படி இந்த குண்டுவெடிப்பு வழக்கில் டாக்டர் உமர் நபியின் உதவியாளர் ஜசீர் பிலால் வானி கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் ட்ரோன்களை மாற்றியமைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த ஏதுவாக மாற்றியமைத்து, தொழில்நுட்ப உதவி செய்துள்ளார். மேலும் இவர் ராக்கெட் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் பயன்படுத்திய ‘டெட் டிராப்’ இ-மெயில்.. வெளியான திடுக் தகவல்!!

விசாரணையில் ஜசீரை பல மாதங்கள் தொடர்ந்து தீவிரமாக மூளை சலவை செய்து தற்கொலை தாக்குதல் நடத்த உமர் நபி முயற்சித்து வந்துள்ளது தெரியவந்தது. ஆனால் மிகவும் ஏழ்மை நிலை காரணமாக குடும்பத்தை விட்டு செல்ல முடியாது என்பதாலும், இஸ்லாமில் தற்கொலை செய்வது தடைவிதிக்கப்பட்டிருப்பதாலும் ஜசீர் இந்த திட்டத்தில் இருந்து கடந்த ஏப்ரல், 2025 அன்று விலகியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை உதவியாளராக மட்டும் உமர் நபி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.