8 பிள்ளைகள்.. குடும்ப வறுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தந்தை.. சோக சம்பவம்!
Man Killed Himself Due To Extreme Poverty | தெலங்கானாவை சேர்ந்தவர் நவ்ஷாத். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கூலி தொழில் செய்து வந்த அவரால் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் போன நிலையில், தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
ஹைதராபாத், நவம்பர் 20 : தெலங்கானா (Telangana) மாநிலம், ஹைதராபாத் (Hyderabad) அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த நவ்ஷாத் என்ற 45 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 38 வயதில் காத்தூன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று தங்களது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளனர்.
குடும்ப வறுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்
என்னதான் வேலைக்கு சென்றாலும் அந்த வருமானம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. குடும்பத்தின் செலவு கூடுதலாகிக்கொண்டே செல்வதாக நவ்ஷாத் அடிக்கடி தனது மனைவியிடம் புலம்பியும் உள்ளார். நாளடைவில் அது அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று நன்றாக குடித்துவிட்டு வீட்டிக்கு வந்த நவ்ஷாத், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : மங்காத்தா பாணியில் ஏடிஎம் வாகனம் கடத்தல்.. ரூ.7 கோடி கொள்ளை.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்




கதறி அழுத மனைவி மற்றும் குழந்தைகள்
நவ்ஷாத் வீட்டின் அறையில் தூக்கிட்டு தொங்குவதை கண்டு அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நவ்ஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நவ்ஷாத் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : 2 பிள்ளைகளை ஆற்றில் தள்ளி கொலை செய்த தந்தை.. தானும் தற்கொலை!
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வறுமை மிக கொடிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வறுமையின் காரணமாக பசி, பட்டினி, அடிப்படை கல்வி என அனைத்திலும் பெரும்பாலான பொதுமக்கள் சிக்கலை சந்திக்கின்றனர். இந்த நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.