Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மங்காத்தா பாணியில் ஏடிஎம் வாகனம் கடத்தல்.. ரூ.7 கோடி கொள்ளை.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ATM Cash Van Robbery : ஏடிஎம் வாகனம் கடத்தப்பட்டடு கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யச் சென்ற வாகனத்தை ஒரு கும்பல் நிறுத்தி, ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.

மங்காத்தா பாணியில் ஏடிஎம் வாகனம் கடத்தல்.. ரூ.7 கோடி கொள்ளை.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Nov 2025 19:08 PM IST

பெங்களூர், நவம்பர் 19:  கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் (Bengaluru) பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி, ரூ.7.11 கோடி கொள்ளையடித்து தப்பிச் சென்றலால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் நவம்பர் 19, 2025 அன்று மதியம், இன்னோவா காரில் வந்த ஒரு கும்பல் ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யச் சென்ற வாகனத்தை நிறுத்தி, ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. ஜெயதேவா டெய்ரி சர்க்கிள் அருகே பணத்தை ஏற்றிச் சென்ற வாகனம், சவுத் எண்ட் சர்க்கிள் அருகே ஏடிஎம் (ATM) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​ குறுக்கிட்ட மர்ம நபர்கள் பாதுகாவலர்களைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தில் கொள்ளை

பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய பாதுகாவலர்களுடன் வாகனம் போய்க்கொண்டிருந்தது. இந்த நேரத்தில், ஜெயதேவா பால் பண்ணை அருகே இன்னோவாவில் வந்த  ஏழு பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் வாகனத்தை நிறுத்தி, ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி மிரட்டியது. பின்னர் துப்பாக்கி ஏந்திய நபர் உட்பட அனைவரையும் அங்கே இறக்கிவிட்டு, வாகனத்தையும் ஓட்டுநரையும் டெய்ரி சர்க்கிளுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் வாகனத்தை டெய்ரி சர்க்கிள் மேம்பாலத்தில் நிறுத்தி, வாகனத்தில் இருந்த பணத்தை இன்னோவா காரில் ஏற்றி தப்பி ஓடிவிட்டனர். தற்போது, ​​சுட்டகுண்டேபால்யா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்று புதைத்த வனத்துறை அதிகாரி.. காணாமல் போனதாக நாடகம்!

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என கூறிய கொள்ளையர்கள்

ஜெயாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அசோக் பில்லர் அருகே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், கொள்ளையர்கள் தாங்கள் ஆர்பிஐயைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய கொள்ளையர்கள், ஏடிஎம் வாகனம் விதிகளை மீறியதாக கூறி பணத்துடன் சிஎம்எஸ் வாகனத்தை கடத்தி, காவல் நிலைய பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் சுட்டுகுண்டே பால்யா காவல் நிலையத்திற்கு உட்பட்ட டெய்ரி சர்க்கிள் மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்தி, பணத்தை தங்கள் இன்னோவா காரில் ஏற்றி தப்பி ஓடிவிட்டனர்.

ஏடிஎம் வாகனத்தில் மொத்தம் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஒரு ஓட்டுநர், இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் மற்றும் மற்றொரு பணம் டெபாசிட் செய்தவர் ஆகியோர் சித்தாபூர் காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கைரேகை குழு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

போலி எண்களை பயன்படுத்திய கொள்ளையர்கள்

கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த இன்னோவா காரில் போலி எண் தகடுகளை இணைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய எண்,   மாருதி சுசுகி காருடையது என்பது தெரியவந்துள்ளது. இதிலிருந்து, இந்த கும்பல் சரியாக திட்டமிட்ட பிறகு இந்த குற்றத்தைச் செய்துள்ளது என்பது தெளிவாகிறது.

இதையும் படிக்க : கத்தியுடன் இருவரை ஓட ஓட விரட்டி குத்த முயற்சி.. விமான நிலையத்தில் பரபரப்பு!!

பணத்தைக் கொள்ளையடித்த பிறகு ஹோசகோட்டை என்ற பகுதியை நோக்கிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் டெய்ரி சர்க்கிள், கோரமங்கலா, சோனி வேர்ல்ட் ஜங்ஷன், டோம்லூர், மாரத்தஹள்ளி, வைட் ஃபீல்ட் வழியாக ஹோசகோட்டை நோக்கிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.  இவ்வளவு பெரிய அளவிலான கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல் ஆணையர், நகரம் முழுவதும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெங்களூரை விட்டு வெளியேறுவதைத் தடுக்க நகர எல்லைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களைச் சரிபார்க்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.