Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற நபர்.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

17 Years Old Girl Birthday Party Turned into Tragedy | பெங்களூரில் 17 வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற நபர் ஒருவர் அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற நபர்.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Nov 2025 08:56 AM IST

பெங்களூரு, நவம்பர் 17 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே உள்ள மாதநாயக்கனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் 26 வயதான யதீஷ். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த சிறுமியும் இவரிடம் நட்பாக பழகியுள்ளார். இந்த நிலையில், சிறுமியின் பிறந்த நாள் அனறு கேக் வெட்டுவதாக கூறி சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர் கொடூர செயலை செய்துள்ளார்.

வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியன் வன்கொடுமை செய்த நபர்

சிறுமியின் பிறந்த நாள் அன்று அவருக்கு கேக் வெட்டுவதாக கூறி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற யதீஷ், அங்கு வைத்து கேக் வெட்டியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த சிறுமி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அவர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்.. வீதியையே இருட்டாக்கிய இளைஞர்!

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

சிறுமி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : குடிசை வீடுகளை தீக்கிரையாக்கிய காகம்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக அழைத்துச் சென்று 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.