வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்.. வீதியையே இருட்டாக்கிய இளைஞர்!
Youth Made Streets Dark in Kerala | கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், ஒரு வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்களின் பியூசை பிடுங்கிச் சென்றதால் அந்த வீதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
கொச்சி, நவம்பர் 16 : கேரள (Kerala) மாநிலம், காசரக்கோடு மாவட்டம், உரி பகுதியை சேர்ந்தவர் முகமது முன்வர் என்ற 24 வயது இளைஞர். இவருக்கு ரூ.22 ஆயிரத்துக்கான மின் கட்டண பில் வந்துள்ளது. வீட்டில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய மின்சாதன பொருட்கள் எதுவும் இல்லாதபோதும் இந்த கட்டணம் வந்தது அவருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் அவர் நேராக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் ஒரு நாளில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மின்சாரத்தை துண்டித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்
மின்கட்டணம் செலுத்த ஒரே ஒரு நாள் மின்வாரிய அதிகாரிகள் கால அவகாசம் வழங்கிய நிலையில், அந்த இளைஞர் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து கடன் வாங்கி ரூ.22 ஆயிரம் மின் கட்டணம் செலுத்த சென்றுள்ளார். அப்போது அலுவலக நேரம் முடிந்துவிட்டதாகவும், அதன் காரணமாக அடுத்த நாள் கட்டணத்தை செலுத்த வருமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவரின் தந்தை அவருக்கு போன் செய்து வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறியுள்ளார். கட்டணம் செலுத்துவதற்கு முன்னதாகவே மின்வாரிய அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டது அவருக்கு கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க : அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 5 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ




24 டிரான்ஸ்பார்மர்களின் பியூஸ்களை பிடுங்கிய இளைஞர்
கட்டணம் செலுத்த முடியாமல் போனது, வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஆகியவை அனைத்தும் அந்த இளைஞரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிய அந்த இளைஞர், அந்த தெருக்களில் இருந்த டிரான்ஸ்பார்மர்களில் இருந்த பியூஸ்களை பிடுங்கிச் சென்றுள்ளார். இதன் காரணமாக அந்த மின்வாரிய அலுவலகத்தின் சுற்று வட்டாரா பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் என ஏராளமான பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்.. தானும் தற்கொலை!
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக முன்வரை கைது செய்த போலீசார், அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.