Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கும்மிருட்டாக மாறப்போகும் இந்தியா.. வேகமாக வரும் எரிமலை சாம்பல்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Ethiopia Volcano Eruption | எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தியாவை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வானிலை இருண்டு காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

கும்மிருட்டாக மாறப்போகும் இந்தியா.. வேகமாக வரும் எரிமலை சாம்பல்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வெடித்து சிதறிய எரிமலை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Nov 2025 11:37 AM IST

டெல்லி, நவம்பர் 25 : எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்து (Ethiopia Volcano Blast) சிதறியதன் காரணமாக இந்தியாவில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ, ஆகாசா ஏர் ஆகிய விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளன. எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்ததன் விலைவாக அதன் சாம்பல் டெல்லியை நோக்கி வந்துக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த எரிமலை வெடிப்பு விவகாரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்த எரிமலை

எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி (Hayil – Gubbi) எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துள்ளது. இந்த எரிமலையில் இருந்து மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சாம்பல் மற்றும் கரும் புகை வெளியேறி வரும் நிலையில், அது இந்தியாவை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தான் டெல்லியில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

வானில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை வெளியேறும் சாம்பல் மற்றும் புகை

இதையும் படிங்க : BAPS மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 30 ஆண்டுகால கொண்டாட்டம் – தலைவர்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கள்

எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்துள்ளதன் காரணமாக அதில் இருந்து வெளியேறும் கரும் புகை ஏமன் மற்றும் ஓமன் கடல் வழியாக இந்தியாவை அடைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே கடும் காற்று மாசை எதிர்க்கொண்டு வரும் டெல்லிக்கு இது மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும்

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பில் இருந்து வெளியேறும் சாம்பல் சுமார் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தியாவை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது. இரவு 10 மணிக்குள் இந்தியாவை வந்தடையும். இந்த எரிமலை சாம்பல் காரணமாக இந்தியாவில் வானம் வழக்கத்தை  விட இருண்டு காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.