Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

BAPS மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 30 ஆண்டுகால கொண்டாட்டம் – தலைவர்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கள்

ஐக்கிய நாடுகள் சபையுடனான 30 ஆண்டுகால கூட்டாண்மை ஒரு வரலாற்றுப் பயணம் என்று பல பிரபலங்கள் கூறியுள்ளனர். உலகளாவிய கூட்டாண்மை அமைதி, சேவை மற்றும் மனிதநேயத்தை மறுவரையறை செய்துள்ளது என்று அவர்கள் விளக்கினர். வியன்னாவில் BAPS - நல்லெண்ணம், சேவை மற்றும் மனித மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் உலகளாவிய கூட்டாண்மையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடியது.

BAPS மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 30 ஆண்டுகால கொண்டாட்டம் – தலைவர்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கள்
Baps Un Partnership
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Nov 2025 14:46 PM IST

வியன்னா, நவம்பர் 21 :  BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர மிஷனுடன் இணைந்து, வியன்னாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் ஒரு ஊக்கமளிக்கும் சர்வதேச நிகழ்வை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு இரண்டு மிக முக்கியமான மைல்கற்களைக் கொண்டாடியது.   BAPS மற்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் இடையேயான மூன்று தசாப்த கால வலுவான கூட்டாண்மை கொண்டும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் புனித பிரம்மஸ்வரூப் பிரமுக் சுவாமி மகாராஜ் உலகப் புகழ்பெற்ற மில்லினியம் உலக அமைதி உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தி 25 ஆண்டுகள் ஆகிறது

ஆப்கானிஸ்தான், எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஐ.நா. அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் உலகளாவிய அமைதி, பரஸ்பர மரியாதை மற்றும் மனிதகுலத்திற்கான சேவைக்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதியை மீண்டும் உயிர்ப்பிக்க ஒன்றிணைந்தனர்.

உலகளாவிய தலைவர்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கள்

BAPS மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இரண்டும் “ஒற்றுமை, இரக்கம் மற்றும் முழுமையான முன்னேற்றம்” என்ற மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இந்த மதிப்புகள் உலகின் எதிர்காலத்தை வழிநடத்துகின்றன என்றும் இந்திய மிஷனின் ஆலோசகர் விக்ரம் ஜீத் துக்கல் கூறினார்.

இந்த நிகழ்வின் ஊக்கமளிக்கும் கருப்பொருளான “ஒளி, அமைதி மற்றும் கூட்டாண்மை என ஆழமான அர்த்தமுள்ளதாக IAEA இன் உதவி இயக்குநர் ஜெனரல் பெர்ரி லின் ஜான்சன் விவரித்தார். மேலும் பேசிய அவர், BAPS, வியன்னாவில் உள்ள ஐ.நா. சமூகத்தை ஒற்றுமையின் ஆற்றலுடன் இணைப்பது முற்றிலும் பொருத்தமானது என்றார்.

உலகம் முழுவதும் BAPS இன் நிவாரணப் பணிகளை, குறிப்பாக உக்ரைனில் உள்ள அகதிகளுக்கான அதன் மனிதாபிமான முயற்சிகளைக் குறிப்பிட்டு, அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.  BAPS இன் சேவைகளைக் கேட்பது நான் என் குடும்பத்துடன் திரும்பி வந்ததைப் போல உணர்கிறேன் என்றார்.

நிகழ்வில் பேசிய UNIDO இன் துணை இயக்குநர் ஜெனரல் யூகோ யசுனாகாசிவில் சமூகம், ஆன்மீக அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து, இணக்கமாகச் செயல்படும்போதுதான் நிலையான வளர்ச்சிக்கான உண்மையான பாதை சாத்தியமாகும் என்று அவர் கூறினார். மேலும் BAPS ஐ “உண்மையான உலகளாவிய நண்பர் மற்றும் நல்ல அண்டை வீட்டார் என்று அவர் பாராட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய யான் டுபோஸ்க், மேயர், புசி-செயிண்ட்-ஜார்ஜ், ஐரோப்பாவில் BAPS ஊக்குவிக்கும் கலாச்சார நல்லிணக்கம் மற்றும் மதிப்பு அடிப்படையிலான உரையாடல் மிகவும் முக்கியமானது என்று அவர் விவரித்தார். “பாரிஸில் வரவிருக்கும் BAPS கோயில் ஐரோப்பாவின் கலாச்சார ஒற்றுமையின் பிரகாசமான அடையாளமாக மாறும் என்றார்.

பின்னர் பேசிய அபுதாபியில் உள்ள BAPS இந்து கோயில் தலைவர்  ரம்மவிஹாரிதாஸ் சுவாமி,  கூட்டாண்மை மூலம் அமைதி” என்ற தனது ஊக்கமளிக்கும் உரையில், மனித இதயங்கள் தன்னலமற்ற தன்மை, நன்றியுணர்வு மற்றும் சேவையால் நிரப்பப்பட்டால் மட்டுமே உண்மையான அமைதி சாத்தியமாகும் என்று அவர் விளக்கினார்.

BAPS வெளி உறவுகள் தலைவர் ரீனா அமின், இங்கு வந்திருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும்  பேசிய அவர்,  “BAPS இன் தன்னார்வலர்களான நாங்கள், நேர்மை, பணிவு மற்றும் மனிதாபிமான உணர்வோடு உலகிற்கு சேவை செய்வதில் உங்கள் தொடர்ச்சியான ஆதரவையும் கூட்டாண்மையையும் மனதார எதிர்பார்க்கிறோம்.”