ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கியது ஏன்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்!
Trump On India's Permission To Buy Oil From Russia | ஈரான் போர் காரணமாக எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு டிரம்ப் அனுமதி வழங்கினார். இந்த நிலையில், அது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்கா, மார்ச் 08 : ஈரான் போருக்கு (Iran War) மத்தியில் இந்தியா (India), ரஷ்யாவிடம் (Russia) இருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) அனுமதி வழங்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து டிரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதி வழங்கியது குறித்து டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் என்ன கூறியுள்ளார் என்று விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதி வழங்கிய டிரம்ப்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரான் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், உலக நாடுகள் எண்ணெய் ஏற்றிச் செல்லும் பிரதான வழியாக உள்ள ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அதுமட்டுமன்றி, அந்த வழியாக செல்லும் எந்த ஒரு கப்பலையும் தாக்குவோம் என்று கூறியிருந்தது. இந்த சூழலாக உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.
இதையும் படிங்க : போரின் தாக்கம் – எரிபொருள் மட்டுமல்ல… இண்டெர்நெட் சேவையும் பாதிக்கும் அபாயம் – என்ன காரணம்?




இந்த நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதி வழங்க டிரம்ப் யார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அனுமதி வழங்கியது ஏன் – டிரம்ப் விளக்கம்
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகச் சிறியது. அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது. கச்சா எண்ணெய் விலை விரைவாக குறையும். குறுகிய கால உலகின் அமைதி பாதுகாப்புக்கு செலுத்தும் மிகச் சிறிய விளைவாகும். கச்சா எண்ணெய் விலை குறித்து முட்டாள்கள் மட்டுமே வித்தியாசமாக சிந்திப்பார்கள். இந்தியா சந்தித்து வரும் அழுத்தத்தை குறைக்கவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க விளக்கு அளித்தேன். இவ்வாறு ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.