Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம்.. முன்னாள் காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன்!

Man Killed Ex Lover | உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். தன்னுடனான காதலை முறித்துக்கொண்டு அந்த பெண் வேறு திருமணம் செய்த நிலையில், ஆத்திரத்தில் அவர் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார்.

வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம்.. முன்னாள் காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன்!
கொலை செய்தவர் மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Nov 2025 06:56 AM IST

லக்னோ, நவம்பர் 26 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், கோரக்பூர் மாவட்டம், ரசூல்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தீபக் என்ற இளைஞர். இவர் அதே கிராமத்தை சேர்ந்த ஷிவானி என்ற 20 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக ஷிவானி, தீபக் உடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நெடைபெற்றுள்ளது.

என்னுடனான காதலை ஏன் முறித்தாய் – காதலன் வாக்குவாதம்

2025, மே மாதம் திருமணம் செய்துக்கொண்டு கணவர் வீட்டுக்கு சென்ற ஷிவானி, மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த வகையில், அவர் வீட்டில் இரவு படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது தீபக் அங்கு சென்றுள்ளார். அவர் ஷிவானி தன்னுடனான காதலை முறித்துக்கொண்டு குறித்து, அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க : புதிய தொழிலாளர் குறியீடுகள் சொல்வது என்ன? இதில் ஒருவரின் அடிப்படை சம்பளம் பாதிக்குமா? யார் பயன் பெறுவார்கள்?

அரிவாளால் சரமாரியாக வெட்டிய காதலன்

திபக் உடனான காதலை முறித்துக்கொண்டது குறித்து இருவருக்கும் இடையே மிக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், திபக் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஷிவானியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ஷிவானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : ரூ.262 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

தீபக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

ஷிவானி தனது அறையில் பிணமாக கிடப்பதை கண்டு அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் உடனடியாக அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் ஷிவானியின் குடும்பத்தார் அளித்த தகவலின் அடிப்படையில், தீபக்கை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.