Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பல ஆண் நண்பர்களிடம் பேசிய தங்கை.. கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் குத்தி கொலை செய்த அண்ணன்!

Brother Killed Sister Over Talking to Male Friends | உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பல ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசி வந்த நிலையில், அதனை கண்டு ஆத்திரமடைந்த அவரது அண்ணன் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.

பல ஆண் நண்பர்களிடம் பேசிய தங்கை.. கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் குத்தி கொலை செய்த அண்ணன்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Nov 2025 07:29 AM IST

லக்னோ, நவம்பர் 27 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள இடோரா கோட்டியா கிராமத்தை சேர்ந்தவர் நைனா தேவி என்ற 22 வயது இளம் பெண். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் தொடங்கியுள்ளனர். அதாவது, நைனா தேவிக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். ஆனால், பார்க்கும் மாப்பிள்ளைகளை எல்லாம் பிடிக்கவில்லை என கூறி நைனா நிராகரித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பல ஆண் நண்பருடன் தொடர்ந்து பேசி வந்ததால் உருவான சிக்கல்

தங்கை திருமணம் வேண்டாம் என்று கூறிய நிலையில், அவரது அண்ணன் ஷேர் சிங் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது அவர் நைனா தேவியின் செல்போனை அவர் சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது நைனா தேவி பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததை அவரது அண்ணன் கண்டு பிடித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த அவர், தனது தங்கையிடும் அது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையு படிங்க : மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள்.. இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

ஆத்திரத்தில் தங்கையை குத்தி கொலை செய்த அண்ணன்

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணன் – தங்கை இடையே மிக கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த இளம் பெண்ணின் அண்ணன் கூர்மையான ஆயுதத்தை எடுத்து தனது தங்கையின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் நைனா தேவி பலத்த காயமடைந்துள்ளார். அவரது கழுத்தில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியுள்ளது. பின்னர் சிறிதி நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க : வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம்.. முன்னாள் காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன்!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தங்கை பல ஆண் நண்பர்களுடன் பேசி வந்த நிலையில், ஆத்திரத்தில் அண்ணன் தங்கையை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.