Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிஜிட்டல் கைது மோசடி.. ரூ.1.92 கோடி பணத்தை இழந்த 71 வயது முதியவர்!

Hyderabad Man Loses 1.92 Crore Rupees | இந்தியாவில் ஆன்லைன் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் கைது மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.1.92 கோடி பணத்தை இழந்துள்ளார்.

டிஜிட்டல் கைது மோசடி.. ரூ.1.92 கோடி பணத்தை இழந்த 71 வயது முதியவர்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Dec 2025 17:18 PM IST

ஐதராபாத், டிசம்பர் 01 : தொழில்நுட்ப வளர்ச்சியால் (Technology Development) பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், அதில்  பல ஆபத்துகளும் உள்ளன. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக பயன்படுத்தும் சிலர், ஆன்லைன் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய மோசடி சம்பவங்களின் ஒரு வகை தான் டிஜிட்டல் கைது மோசடி (Digital Arrest Scam). இந்த டிஜிட்டல் கைது மோசடியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வரும் நிலையில், டிஜிட்டல் கைது மோசடியில் முதியவரிடம் இருந்து ரூ.1.92 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் கைது மோசடி – ரூ.1.92 கோடி பணத்தை இழந்த நபர்

ஐதராபாத்தை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவருக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த போன் காலில் தங்களை சிபிஐ அதிகாரிகள் என கூறிய சிலர், முதியவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். அதாவது, முதியவர் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாகவும், இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இவற்றை கூறிய அவர்கள் தங்களது அனுமதி இல்லாமல் வேறு யாரிடமும் பேச கூடாது என முதியவரை மிரட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : 106.286 கிலோ மீட்டரகள் நடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ரோபோ!

அவர்கள் மிரட்டியதில் பயந்துப்போன முதியர்வர் தனக்கும், இந்த மோசடிகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், அந்த மோசடி கும்பல் வீடியோ கால் மூலம் அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஆவணங்களை காட்டி முதியவரை தொடர்ந்து மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் வழக்கில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என கூறி முதியவரை பணத்தை அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளனர்.

மோசடி கும்பலுக்கு கோடி கணக்கில் பணத்தை அனுப்பிய முதியவர்

அவர்கள் சொன்னதை நம்பிய அந்த முதியவர் சுமார் 1.92 கோடி வரை பணத்தை அனுப்பியுள்ளார். அதற்கு பிறகு தான் அது ஒரு மோசடி என்பதும், தனது பணம் மோசடிக்காரர்களிடம் சென்றதை அவர் உணர்ந்துள்ளார். இதனை உணர்ந்துக்கொண்ட முதியவர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளர்.

இதையும் படிங்க : மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள்.. குரோமா சேலில் சம்பவம்!

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.