வெறும் ரூ.11.49 லட்சத்திற்கு அறிமுகமான டாடா சியாரா.. மாத தவணை எவ்வளவு வரும்?
Tata Sierra Introduced At Just 11.49 Lakhs | டாடா நிறுவனத்தின் சியாரா கார் தற்போது புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் வெறும் ரூ.11.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த டாடா சியாராவின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்ற கார் தான் டாடா சியாரா (Tata Sierra) . இந்த கார் கடந்த 20 ஆண்டுகளாக சந்தையில் இல்லாத நிலையில், தற்போது புதுப்பொலிவுடன் மீண்டும் சியாரா காரை டாடா அறிமுகம் செய்துள்ளது. பழைய டாடா சியாராவின் அதே பிரம்மாண்டை இந்த கார் கொண்டுள்ள நிலையில், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமன்றி, இந்த புதிய டாடா சியாரா ரூ.11.49 லட்சம் என்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் இந்த காரின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய டாடா சியாரா காரின் சிறப்பு அம்சங்கள் என்ன, இதனை மாத தவணை முறையில் வாங்கினால் எவ்வளவு மாத தவணை செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான புதிய டாடா சியாரா
இந்த புதிய டாடா சியாரா மொத்தம் நான்கு அட்டகாசமான வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டர்போ டீசல் மற்றும் டீசல் என மூன்று விதமான என்ஜின் அம்சங்களுடனும் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மொத்தம் 6 அட்டகாசமான நிறங்களில் அறிமுகம் செயப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இனி ஸ்பேம் தொல்லை இல்லை.. வந்தது அசத்தல் அம்சம்!




டிசம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் புக்கிங்
இந்த புதிய டாடா சியாரா காரின் புக்கிங் டிசம்பர் 16, 2025 முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜனவரி 15, 2025 முதல் காரை வாடிக்கையாளர்களிடம் டெலிவரி கொடுக்க டாடா திட்டமிட்டுள்ளது. இந்த டாடா சியாரா காரை முன்பதிவு செய்து வாங்க நினைக்கும் நபர்கள் டாடா ஷோரூம்களிலோ அல்லது இணையதளத்தில் முன்பதிவு செய்தோ காரை பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் புதுப்பொலிவுடன் அறிமுகமான About அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?
மாத தவணை முறையில் வாங்கினால் எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும்
பொதுவாக கார் லோன்களுக்கு 7.5 சதவீதம் முதல் 11.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நீங்கள் இந்த டாடா சியாரா காரை 10 சதவீத வட்டியில் வாங்கினால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் மாத தவணையாக ரூ.24,413 செலுத்த வேண்டும். டாடா சியாரா ரூ.11.49 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் நிலையில், நிங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் மாதம் ரூ.24,413 செலுத்த வேண்டும். அதன்படி நீங்கள் ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக ரூ.14,64,771 செலுத்தி இருப்பீர்கள்.