Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எலான் மஸ்கின் எக்ஸ் தளத்திற்கு ரூ.1,259 கோடி அபராதம்.. ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை!

EU Fines Elon Musk's X App 120 Million | எலான் மஸ்கின் எக்ஸ் தளம் விதிகளை மீறியுள்ளதாக கூறி அதன் மீது ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது. அதன் இந்திய மதிப்பு ரூ.259 கோடி ஆகும்.

எலான் மஸ்கின் எக்ஸ் தளத்திற்கு ரூ.1,259 கோடி அபராதம்.. ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Dec 2025 23:38 PM IST

லண்டன், டிசம்பர் 06 : ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட விதிகளை பின்பற்றாததான் காரணமாக எலான் மஸ்கின் (Elon Musk) எக்ஸ் (X) வலைத்தளம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ஏமாற்றும் வடிவமைப்புகள் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஒழுங்குமுறை ஆணையம் 120 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. இந்த நிலையில், எலான் மஸ்கின் எக்ஸ் வலைத்தளம் அபராதத்திற்கு உள்ளானதன் காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எலான் மஸ்கின் எக்ஸ் மற்றும் வலைத்தளத்திற்கு அபராதம்

ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்ட விதிகளை அறிமுகம் செய்தது. அந்த விதிகளின் மூலம் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிகளை பின்பற்ற அறிவுறுத்தியது.

இதையும் படிங்க : சஞ்சார் சாத்தி செயலிக்கு கடும் எதிர்ப்பு.. உத்தரவை வாபஸ் வாங்கிய மத்திய அரசு!

ரூ.1,259 கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம்

ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை அறிமுகம் செய்துள்ள நிலையில், எலான் மஸ்கின் வலைத்தளம் அதற்கு கட்டுப்படாமலும், விதிகளுக்கு புறம்பான செயல்களை செய்து வந்ததாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை என்ன?

அதாவது எலான் மஸ்கின் எக்ஸ் வலைத்தளம் விதிகளை மீறியுள்ள நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,259 கோடி  அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவுத்துள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஒழுங்குமுறை ஆணையம்

சில இடங்களில் பாதுகாப்பு குறைபாடான ஏமாற்றும் வடிவமைப்புகள் உள்ளதாகவும், ஆய்வாளர்களுக்கு தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் எக்ஸ் தளத்தின் மீது இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணைய விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.