மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தின் இடார்சியில், பழைய போபால் பேதுல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாதரோட்டா கால்வாய் பாலம் அருகே கார் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக நகர காவல் ஆய்வாளர் சஞ்சீவ் சிங் தெரிவித்தார்.